ஓமனில் ஒரே நாளில் 1,067 பேருக்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மஸ்கட் : ஓமனில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 1,067 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஓமனில் கொரோனா பாதிப்புகளை குறைக்க ஓமன் அரசு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இது தொடர்பாக சுகாதாரதுறை கூறுகையில், ஓமனில் இன்று கொரோனாவிற்கு 1,067 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,858 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றுக்கு ஒரு நாளில் 12 பேர் பலியாகினர். இதுவரை தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 371 ஆக அதிகரித்தது.


latest tamil news



புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில், 959 பேர் ஓமன் நாட்டையும், மற்ற 108 பேர் பிறநாடுகளையும் சேர்ந்தவர்கள். நாட்டில் நோய் தொற்றுக்கு இதுவரை 54,061 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X