பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

ஜம்மு: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் புகழ் பெற்ற குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.latest tamil newsஇது குறித்து ஜம்மு யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் கிரிஷ் சந்தர் முர்மு தெரிவித்து இருப்பதாவது: கவர்னாக பொறுப்பேற்ற உடன் மாநிலத்தின் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு சான்று பெற முயற்சி எடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக குங்குமப்பூவை புவிசார் குறியீடு பெற பதிவு செய்வதற்கான சான்றிதழை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளத்தாக்கின் முக்கிய பிராண்டாக உள்ளதை உலக வரைபடத்தில் கொண்டு வருவதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கையாகும். என கவர்னர் கூறினார்.


latest tamil newsஇது குறித்து மாநில அதிகாரி கூறியதாவது: உலகில் காஷ்மீரில் மட்டுமே 1,600 மீட்டர் உயரத்தில் குங்குமப்பூ வளர்க்கப்படுகிறது. புவிசார் குறியீடு கிடைக்கும் பட்சத்தில் கலப்படத்தை தடுத்து நிறுத்த முடியும். மேலும் விவசாயிகளுக்கு எதிர்பார்க்கப்படும் விலையை பெற உதவும். நடப்பு பருவத்தில் சிறந்ததொரு உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
குங்குமப்பூவிற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் நேஷனல் மிஷன் பார் சஃப்ரான்(என்எம்எஸ்) தோற்றுவிக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு சுமார் ரூ.411 கோடி ஒதுக்கி உள்ளது.இதன்மூலம் சுமார் 3,700 ஏக்கருக்கும் மேலாக பரப்பளவு அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-ஜூலை-202001:03:43 IST Report Abuse
தமிழ்வேல் இதை மேலும் ஊக்கு விக்க வேண்டும். இதன் உற்பத்தி இந்தியாவிற்கே போதவில்லை. இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. குங்குமப்பூவிற்கு இவ்வளவு அலட்டிடுயூட் (உயரம்) தேவையில்லை. பலநாடுகளில் (ஸ்பெயின், மொரோக்கோ, இரான்..... கடல்மட்ட உயரத்திலேயே பயிரப்படுகின்றது. இதை ஊக்குவிப்பதால், பல விவசாயக்குடும்பங்களுக்கு வேலை கிடைக்கும். பூவில் குங்குமப்பூவே விலை அதிகம். முழம் கணக்கில் வாங்க முடியாது.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஜூலை-202005:41:23 IST Report Abuse
 Muruga Velகுங்குமப்பூ பாலில் கலந்து சாப்பிட்டால் குழந்தை சிகப்பா பிறக்கும்னு ஒரு மூட நம்பிக்கை ..பிரியாணிக்கு அலங்காரமா உபயோகப்படுவதை தவிர பெரிய பயன் இருப்பதாக தெரியவில்லை .....
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
25-ஜூலை-202023:03:16 IST Report Abuse
ocean குங்கும பூ குரோனாவுக்கு பரம எதிரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X