மும்பையில் கொரோனா தொற்றுடன் பருவகால நோய்களும் பரவும் அபாயம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுடன் மலேரியா, டெங்கு போன்ற பருவகால நோய்களும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் நோய் தொற்று அதிகரிக்கும் பகுதிகளாக மும்பை, தாராவி, புனே மற்றும் நாக்பூர், நவிமும்பை உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க மும்பை பெருநகர மாநகராட்சி (BMC) பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீப காலங்களாக மும்பை, அசாம், பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவ நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை தற்போது பல சிக்கல்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

பொதுவாக மழை காலங்களில் (காலநிலை மாற்றத்தால்) பல்வேறு பருவ நோய்கள் அதிகரிக்கும். தற்போது பெய்த மழையால் , கொரோனா தொற்றுடன் டெங்கு, மலேரியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற சில நோய்களும் மக்களை தாக்க துவங்கியுள்ளது. இது கொரோனா தொற்றின் நிலையை சற்று சிக்கலாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மும்பை போன்ற நகரங்களில் அனைத்து மூன்றாம்நிலை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் கடந்த சில வாரங்களில் லெப்டோ - கொரோனா ( கொரோனா தொற்றுடன் கூடிய லெப்டோஸ்பிரோசிஸ், டெங்கு - கொரோனா (டெங்குவுடன் கூடிய கொரோனா) மற்றும் மலேரியா - கொரோனா (கொரோனாவுடன் மலேரியா தொற்றும் பாதிக்கப்பட்டு) உள்ள நோயாளிகளை காண முடிந்தது. ஆயினும் நோயாளிகள் நிலையான, சிறந்த கவனிப்புடன் தொற்றில் இருந்து மீட்கப்படுகின்றனர்.


latest tamil news



மும்பையில் உள்ள பரேலின் கேஇஎம் மருத்துவமனை கொரோனா தொற்றுடன் டெங்கு நோயை ஆவணப்படுத்தியது. இது குறித்து அம்மருத்துவமனை டீன், டாக்டர் ஹேமந்த் தேஷ்முக் கூறுகையில், நோயாளி மருத்துவ ரீதியாக நிலையாக உள்ளார். இரட்டை நோய்களால் பாதிக்கப்பட்டதால் எவ்வித அசாதாரண வெளிப்பாடுகையும் அவர்கள் சந்திக்க வில்லை. இது போன்ற நோயாளிகளுக்கு காய்ச்சல் பொதுவான அறிகுறியாகும். மருத்துவர்கள் இதை வேறுபடுத்தி பார்க்க முடிந்ததும் சிறப்பு. நோயாளிகள் தொற்றுக்கான அறிகுறி (நேர்மறையாக) மற்றும் பருவகால நோய்களுக்கான அறிகுறியுடன் வந்தாலும் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கூறினார்.


latest tamil news



தொடர்ந்து, பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனை நேற்று தனது முதல் மலேரியா பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டது. கொரோனா இல்லாத நிலையில், மலேரியா பாதிக்கப்பட்ட நபர், எவ்வித சிக்கலுமின்றி, OPD அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பார், ஆனால் இப்போது நோயாளிக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றைப் பார்க்க சில நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். சிவிக் ரன் சியான் மருத்துவமனையில் 4 பேர் இரட்டை நோய்களுடன் (லெப்டோ - கொரோனா) மற்றும் (மலேரியா - கொரோனா) நோயாளிகள் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் எவ்வித பிரச்னைகளும் இல்லை. இது தொடர்பாக நகரின் பல்வேறு மருத்துவர்களும் சிக்கலான நிலையை கையாள்வது எப்படி என ஆலோசித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆன்டிஜென் பரிசோதனையில் தொற்றின் முடிவு 30 நிமிடங்களில் தெரியும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X