பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்'அரசுடைமை!

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை :சென்னை,போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, 'வேதா நிலையம்' வீடு, அரசுடைமை ஆக்கப்பட்டது. அதற்கான தொகை, 68 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தி, ஜெ., வீட்டை மீட்டெடுத்தது, அ.தி.மு.க., அரசு.சென்னை, போயஸ் தோட்டம் பகுதியில், மறைந்த ஜெயலலிதா வசித்த, 'வேதா நிலையம்' உள்ளது. இதை, அவரது நினைவு இல்லமாக மாற்ற, 2017ல், தமிழக அரசு முடிவு செய்தது.அதற்கு, ஜெ.,வின்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்'அரசுடைமை!

சென்னை :சென்னை,போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, 'வேதா நிலையம்' வீடு, அரசுடைமை ஆக்கப்பட்டது. அதற்கான தொகை, 68 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தி, ஜெ., வீட்டை மீட்டெடுத்தது, அ.தி.மு.க., அரசு.சென்னை, போயஸ் தோட்டம் பகுதியில், மறைந்த ஜெயலலிதா வசித்த, 'வேதா நிலையம்' உள்ளது.
இதை, அவரது நினைவு இல்லமாக மாற்ற, 2017ல், தமிழக அரசு முடிவு செய்தது.அதற்கு, ஜெ.,வின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் ஆட்சேபம் தெரிவித்து, தங்களை ஜெ.,வின் வாரிசுகளாக அறிவிக்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில், ஜெ.,வின், 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை, தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்கி, அவர்களை முதல் நிலை சட்ட வாரிசுதாரர்கள் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.வரி பாக்கிமேலும், ஜெ., வாழ்ந்த இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முன், தீபா, தீபக் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், வாரிசுதாரர்களாக அறிவிக்க கோரிய வழக்கு விசாரணையின் போது, ஜெ.,க்கு, 36.90 கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாக, வருமான வரித்துறை சார்பில்,நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஜெ., வீட்டை, நினைவில்லமாக மாற்றுவதற்கு, நிலம் கையகப்படுத்தும் சட்ட விதிகளின்படி, 67.90 கோடி ரூபாயை, இழப்பீட்டு தொகையாக, தமிழக அரசு நிர்ணயித்தது. கடந்த, 2017ம் ஆண்டின் விலை மதிப்பீட்டின்படி, 1 சதுர அடி, 12 ஆயிரத்து, 60 ரூபாய் வீதம், வேதா நிலையம் அமைந்துள்ள இடம் மற்றும், 24 ஆயிரத்து, 322 சதுர அடி கட்டடத்திற்கு, 67 கோடியே, 90 லட்சம் ரூபாய், இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


உரிமைவரி நிலுவைக்காக, வருமான வரித்துறையும், ஜெ.,வின் வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட, தீபா, தீபக் ஆகியோரும், இடத்துக்கு உரிமை கோருகின்றனர்.எனவே, இழப்பீட்டு தொகை, 67.90 கோடி ரூபாயை, சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில், வைப்புத் தொகையாக, தமிழக அரசு செலுத்தி உள்ளது.உரியவர்கள் இழப்பீட்டு தொகையை, நீதிமன்றம் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது. இழப்பீடு தொகையை செலுத்தியதால், ஜெ., வீடு, நேற்று முதல் அரசுக்கு சொந்தமாகி விட்டது.நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை, முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என, நீதிமன்றம் ஆலோசனை கூறியிருந்தது.அது, நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று, அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள வேதா நிலையம் இல்லம் மற்றும் அது அமைந்துள்ள நிலம் ஆகியவை, நிலம் எடுப்பு அலுவலரால், 22ம் தேதி அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


நடவடிக்கைவேதா நிலையம் இல்லம், அது அமைந்துள்ள இடம் மற்றும் அங்குள்ள ஜெ., பொருட்களை பராமரித்து, நிர்வகிக்கும் பொறுப்பை, ஜெ.ஜெயலலிதா அறக்கட்டளையிடம் ஒப்படைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அந்த அற நிறுவனத்தின் தலைவராக, முதல்வர் உள்ளார். துணை முதல்வர், செய்தித் துறை அமைச்சர், நிதித் துறை, செய்தித் துறை செயலர்கள், அருங்காட்சியகங்கள் இயக்குனர், பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர், அரசால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேர், உறுப்பினர்களாக உள்ளனர். செய்தித் துறை இயக்குனர், உறுப்பினர் செயலராக உள்ளார்.


தீபா திட்டவட்டம்!ஜெ., வீட்டை அரசுடமையாக்கியதற்கு, ஜெ., அண்ணன் மகள் தீபா, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:சட்டப் போராட்டம் தொடரும். வேதா நிலையத்தை, விட்டு கொடுக்க மாட்டேன். அந்த வீடு, குடும்பத்தினரிடம் இருக்க வேண்டும் என்றே, ஜெ., நினைத்தார்.அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தின் மீது, நாங்கள் வழக்கு போடவில்லை. ஜெ., மரணம் எதிர்பாராத விதமானது. அந்த வீட்டை, அரசுக்கு கொடுக்க நினைத்திருந்தால், உயில் எழுதி வைத்திருப்பார். அவர் அவ்வாறு செய்யவில்லை.எனவே, ஜெ., வசித்த வீட்டை, கோவிலாக எல்லாம் மாற்ற முடியாது. நினைவு இல்லத்தை, வேறு எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். எங்கள் தனிப்பட்ட உரிமையை பறிக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.


அமைச்சர் வேண்டுகோள்!''ஜெ., வசித்த வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற, அவரது வாரிசுதாரர்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது:ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது, எங்கள் கடமை. தமிழக மக்கள், அ.தி.மு.க., தொண்டர்களின் ஒட்டுமொத்த எண்ணம், தற்போது நிறைவேறியுள்ளது. இது, அனைவராலும் பாராட்டப்படுகிறது. எங்களுக்கு, ஜெ., வசித்த வீடு கோவில். எனவே, அதை நினைவு இல்லமாக மாற்ற, ஜெ.,வின் வாரிசுகள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஜூலை-202017:55:29 IST Report Abuse
Endrum Indian அந்த வீட்டை அரசுடைமை ஆக்கியதின் பின்னணி என்ன???அந்த வீட்டை இடித்தால் அதன் உள்ளிருந்து தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் ரூ 2 லட்சம் கோடிக்கு கிடைக்கும். ஆகவே இப்போது அண்ணன் மகள் அந்த வீட்டை உரிமை கொண்டாடி வழக்கு போடுவார் என்று உறுதி அளிக்கின்றேன்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-ஜூலை-202017:51:18 IST Report Abuse
கல்யாணராமன் சு. பொது வாழ்க்கையில், அதுவும் ஒரு அரசாங்கத்தின் தலைமையாக இருந்து கொண்டு, நேர்மையை கடைப்பிடிக்காத ஒருவருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதும், நினைவு இல்லம் அமைப்பதும், மிகவும் கீழ்த்தரமான அரசியல் ...... இந்தமாதிரியான செயல்கள் கட்சிகளுக்கும் சரி, மக்களுக்கும் சரி, தவறு செய்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தை அழுத்தமாக ஏற்படுத்திவிடும் ............. ஊழலற்ற நேர்மையான அரசியல் என்பது காணாமல் போய்விடும் ...........
Rate this:
Cancel
v j antony - coimbatore,இந்தியா
26-ஜூலை-202011:34:39 IST Report Abuse
v j antony சட்டத்தின்"பாா்வையிலும் நீதிமன்றத்தின்"பாா்வையிலும் ஜெயலலிதா அவா்கள் தண்டனை அனுபவிக்க வேண்டிய ஒரு குற்றவாளி தான். வாி ஏய்ப்பு செய்து வருமான"வாித்துறைக்கு 37 கோடி அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இப்பணம் தமிழக அரசே மக்கள் வாி பணத்தில் கட்டும் என்பதும் மக்களின் வாிபணத்தில் அவரது வீட்டை 68 கோடிக்கி வாங்கி நினைவு சின்னம் கட்டபடும் என அதிமுக அறிவிப்பதும் அரசியல் சாசனத்திற்கும் சட்டத்திற்கும் எதிரான செயல் குற்றவாளிகள் அரசியலில் இருந்தால் அவா்களை"மாலை போட்டு கவுரவிப்பதும் சாதாரன தனிநபராக இருந்தால் கூண்டில் ஏற்றுவதும் தவறான செயல்..உதாரணத்திற்கு வங்கியில் கோடி கணக்கில் பணத்தை சுருட்டிய விஜய்மல்லையா ஒரு வேளை அரசியலில்"இருந்தால் அவரையும் வேறு கோணத்தில் தான்"நாம் பாா்க்க வேண்டிய சுழலை உருவாக்கியிருப்பாா்கள். அதிமுக தன்"தலைவிக்கு சொந்த"செலவில் எதையோ செய்துகொள்ளட்டும் ஆட்சி அதிகாரம் இருப்பதால் மக்கள் வாிபணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் "செய்யலாம் என நினைப்பதை கைவிட வேண்டும் நீதிமன்றம் தானாக முன்வந்து சட்டத்தின் மேன்மை பாதுகாக்க வேண்டும். வாி ஏய்ப்பு"செய்தால் அது யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே என்பதை உலகுக்கு உணா்த்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X