அபுதாபியில் மூன்றாம் கட்ட கொரோனா பரிசோதனை ; 10,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

அபுதாபி : கொரோனா தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தில் அரபு எமிரேட்சில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் தொற்று நோய்க்கான மருந்தை (தடுப்பூசி) கண்டறியும் சோதனைகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இரண்டாம் கட்டமாக தொற்று நோய்க்கான மனித சோதனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பு மருந்து ஆரோக்யமான தன்னார்வலர்கள் மீது செலுத்தப்படும். பின் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

தற்போது அரபு எமிரேட்சிலும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி பரிசோதனை மூன்றாம் கட்டத்தை எட்டியது. இந்த பரிசோதனையில் சுமார் 20 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பின்பு 42 நாட்கள் வரை அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தடுப்பு மருந்து அவர்களது உடலில் எவ்வாறு செயல்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியின் தனிமை மற்றும் எடுத்துக் கொள்ளும் நேரம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என சுகாதாரதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



உலக சுகாதாரதுறையின் (WHO) பட்டியலிடப்பட்ட சோதனைகளின்படி, சீன மருந்து நிறுவனமான சினோபார்ம் சீனா தேசிய பயோடெக் குழுமம், அபுதாபியை தளமாக கொண்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்பியூட்டிங் நிறுவனமான குரூப் 42 மற்றும் சேஹாவுடன் (Seha) இணைந்து தடுப்பூசி பணியை தொடங்கியது. சுகாதாரதுறை தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகமது அல் ஹமீட், பரிசோதனைக்கான முதல் தன்னார்வலராக பதிவு செய்தார். மேலும் கொரோனாவிற்கான தடுப்பூசி சோதனைகளில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் 42 நாட்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த காலங்களில் அவர்கள் அரபு எமிரேட்சை விட்டு வெளியேற முடியாது.

தொடர்ந்து 6 மாதங்கள் வரை தொலைதொடர்பு சாதனம் மூலமாக அவ்வப்போது சோதனை செய்யப்படும். செலுத்தப்பட்ட மருந்தின் தன்மை குறித்து ஆராயப்படும். நடத்தப்படும் சோதனைகளின் முன்னேற்றத்திற்கான படியாக, விஞ்ஞானிகள் குழு முடிவுகளை பகுப்பாய்வு செய்யும். அரபு அமீரகம் மனித குலத்தின் ஒரு கலங்கரை விளக்கமாகவும், மாறுபட்ட சமூகத்தின் தாயகமாகவும் உள்ளது. இந்த கூறுகள் ஐக்கிய அரபு அமீரகத்தை சோதனையை நடத்துவதற்கான மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளன. மேலும் உலகின் பல மூலைகளிலும் உலகளாவிய தொற்றுநோய்களின் விளைவுகளை நிவர்த்தி செய்வதில் எங்கள் தலைமையின் முக்கிய பங்கோடு இணைந்திருக்கின்றன.


latest tamil news



வைரசை எதிர்கொள்ள ஐக்கிய அரபு எமிரேட் சமூகம் ஒன்றிணைந்ததன் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 20 வெவ்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஏராளமான தன்னார்வலர்கள் மருத்துவ பரிசோதனைகளின் ஒரு பகுதியாக முன்வந்துள்ளனர். சோதனைகள் செயல்திறனுக்கான அதிக வாய்ப்பைக் கொண்டிருப்பதை நிரூபிக்க இது உதவும்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்க ஒரு நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமை எங்களுக்கு உதவியது. இந்த பிரச்சாரம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், தடுப்பூசியின் விளைவுகளை அளவிடுவதற்கு மிகவும் பயனுள்ள அணுகுமுறையை வழங்கும் என்று தேசிய மருத்துவக் குழுவின் தலைவர்டாக்டர் நவல் அல்-காபி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X