பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் புதிதாக 5,072 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் புதிதாக 5.072 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. மொத்தம் 90,942 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 72 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்தம் 1,796 பேர் பலியாகி உள்ளனர்.



latest tamil news



மாநில அளவில் இதுவரை மொத்தம் 33,750 பேர் குணமடைந்தனர். ஒரே நாளில் 2,403 மாநிலம் முழுவதும் குணமடைந்தனர். தற்போது கர்நாடகாவில் 55,388 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 611 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



தலைநகர் பெங்களூருவில் மட்டும் கடந்த ஒரு நாளில் புதிதாக 2,036 பேருக்கு கொரோனா உறுதியானது. மொத்தம் 43,503 பேர் பெங்களூருவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 31,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X