டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (2) | |
இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: எம்.ஜி.ஆர்., சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல், புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலமாக, இது போன்ற, சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது வருத்தத்தை
 'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: எம்.ஜி.ஆர்., சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல், புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலமாக, இது போன்ற, சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது வருத்தத்தை தருகிறது.

'டவுட்' தனபாலு: இது நாள் வரை, கறுப்பு பெயின்ட் ஊற்றுவது, செருப்பு, கற்களை வீசி சேதப்படுத்துவது, அசிங்கமான பொருட்களை வீசி அலங்கோலப்படுத்துவது தான், சிலைகளுக்கு அவமதிப்பாக இருந்தது. காவித்துண்டு அணிவித்தது எப்படி, அவமதிப்பாகும் என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது. ஏனெனில், காவி உடை அணிவது, வீடுகளில் காவி பூசுவது, காவி நிறம் போன்றவை, நம் வழக்கத்தில் உள்ளது தானே என்ற, அப்பாவித்தனமான, 'டவுட்'டும் பலருக்கு எழுகிறது


lபா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில், 113 கொரோனா ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சளி மாதிரி எடுக்கப்படுகிறது. நடமாடும் சளி மாதிரி மையங்களும் செயல்படுகின்றன. இவற்றில், கொரோனா ஆய்வு செய்து கொள்ள, எந்த கட்டணமும் இல்லை. இவ்வளவுக்கு பிறகும், ஆய்வு செய்து கொள்ளாத பலர், கொரோனாவை பரப்பி, சமுதாயத்திற்கு பெரும் கேடு இழைக்கின்றனர்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதில் இருந்து, கொரோனா ஒழிப்பில், தமிழக அரசு சிறப்புற செயல்படுகிறது என்பது, 'டவுட்' இல்லாமல், அனைவருக்கும் விளங்குகிறது. அதே நேரத்தில், இப்படிப்பட்ட ஆட்களால், இன்னும், ஆறு மாதங்கள் ஆனாலும், கொரோனா பரவல் குறையாதோ என்ற, 'டவுட்'டும், நம் மக்களுக்கு வருகிறதுகர்நாடக காங்., முன்னாள் முதல்வர் சித்தராமையா:
பி.பி.இ., கிட்ஸ், தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், படுக்கை, வென்டிலேட்டர் வாங்கியதில், கர்நாடக, பா.ஜ., அரசு ஊழல் செய்துள்ளது. 'ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யவில்லை' என, பா.ஜ., கூறுகிறது. ஊழலுக்கான ஆதாரங்களை இப்போது வெளியிட்டு இருக்கிறேன். முதல்வர் எடியூரப்பா பதில் சொல்ல வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஒவ்வொரு மாநிலத்திலும், ஆளும் அரசு மீது, எதிர்க்கட்சிகளுக்கு, ஊழல் புகார் கூறுவது தான் வேலையோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது. ஏனெனில், தமிழகத்திலும் இது போன்ற புகார்களை, தி.மு.க., எழுப்பியது. அதை வைத்து பார்க்கும் போது, கொரோனா பொது முடக்கத்தால், எதிர்க்கட்சித் தலைவர்கள், வேலையில்லாமல் இருப்பதும் புலனாகிறது!lll


தமிழக, பா.ஜ., தலைவர் முருகன்:
'கந்த சஷ்டி கவசம்' குறித்து, அவதுாறு செய்த, கருப்பர் கூட்டத்தை கண்டித்து, நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரஜினிகாந்த் தான், குரல் கொடுத்துள்ளனர். பிறர் ஏன் கண்டன குரல் எழுப்பவில்லை என தெரியவில்லை. நடிகர் ரஜினிகாந்த், மிகவும் தாமதமாக கண்டனம் தெரிவித்துள்ளார்; முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் எதிர்பார்ப்பது, நடிகர் கமல், கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் தானே, இதுபோன்ற அத்துமீறல்களுக்கு அவ்வப்போது, மறைமுகமாக காரணம் ஆகிறார். வித்தியாசமாக யோசிக்கிறேன்; படம் எடுக்கிறேன் என்ற போர்வையில், விபரீத முயற்சி எடுப்பதில், அவரை மிஞ்ச ஆளில்லை என்பதில், யாருக்கும், 'டவுட்'டே வராது!lதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி:
கடந்த, 1971 தேர்தலில் எதிரிகள் எப்படி நடந்து கொண்டனரோ அப்படித் தான், இப்போதும் நடந்து கொள்கின்றனர். எனவே, 1971 தேர்தல் முடிவு தான், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும்; காவிகளின் திசை திருப்பல் பிரசாரம், ஒருபோதும் எடுபடாது. திராவிடத்தின் லட்சியம் காக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் சட்டசபை தேர்தலில் வென்று காட்டுவார்.

'டவுட்' தனபாலு: கடந்த, 1971 தேர்தலில், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போடப்பட்ட விவகாரம் எழுந்தது. எனினும், அந்த தேர்தலில், தி.மு.க., வென்றது. அதனால் தான், 1971 முடிவு, வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறீர்கள். அந்த காலத்தில், ஹிந்துக்களிடம் ஒற்றுமை இல்லை. இந்த முறை அப்படியில்லையே; அதனால், உங்கள் எண்ணம் ஈடேறுவது, 'டவுட்' தான்!l


பத்திரிகை செய்தி
: தமிழக அரசின், கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாக தோல்விகள் குறித்து விவாதிக்க, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கூட்டம், நாளை நடக்கவுள்ளது. காலை, 10:30 மணிக்கு, காணொலி காட்சி மூலம், தலைவர்கள் உரையாடுவர்.

'டவுட்' தனபாலு: கொரோனா ஊரடங்கு காலத்தில், வீட்டுக்குள் அமர்ந்து, எவ்வளவு நேரம் தான், பத்திரிகைகளை படிப்பது என விரக்தியில் இருக்கும், தி.மு.க., தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கு, ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, சற்று பொழுதுபோக்காக அமையும் என்பதில், 'டவுட்'டே இல்லை. ஏனெனில், இவர்கள் என்ன பேசினாலும், அதை, இ.பி.எஸ்., அரசு கண்டுகொள்ளப் போவதில்லை!lll

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X