சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஆள் வைத்து மிரட்டும் சார் - பதிவாளர்!

Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
டீக்கடை பெஞ்ச் ஆள் வைத்து மிரட்டும் சார் - பதிவாளர்!''புதுசா, 1,000 படுக்கை வசதியோட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப் போறாவ வே...'' என, போனை, 'டயல்' செய்தவுடனே எடுத்த அந்தோணிசாமியிடம் சொன்னார் அண்ணாச்சி.''எந்த மாவட்டத்துலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி. அதற்குள் மற்ற இருவரும், 'கான்பரன்சில்' சங்கமித்தனர். தொடர்ந்தார், அண்ணாச்சி.''மதுரையில, கொரோனா பாதிச்சவங்க
 ஆள் வைத்து மிரட்டும் சார் - பதிவாளர்!


டீக்கடை பெஞ்ச்
ஆள் வைத்து மிரட்டும் சார் - பதிவாளர்!

''புதுசா, 1,000 படுக்கை வசதியோட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப் போறாவ வே...'' என, போனை, 'டயல்' செய்தவுடனே எடுத்த அந்தோணிசாமியிடம் சொன்னார் அண்ணாச்சி.''எந்த மாவட்டத்துலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி. அதற்குள் மற்ற இருவரும், 'கான்பரன்சில்' சங்கமித்தனர். தொடர்ந்தார், அண்ணாச்சி.
''மதுரையில, கொரோனா பாதிச்சவங்க எண்ணிக்கை, 10 ஆயிரத்தை தாண்டிட்டுல்லா... அரசு மருத்துவமனை, தோப்பூர் அரசு நெஞ்சக சிகிச்சை மருத்துவமனைகள்ல, சிகிச்சை குடுத்துட்டு இருக்காவ வே..
.''இது தவிர, 21 இடங்கள்ல, 'கோவிட் கேர் சென்டர்'கள் அமைக்க முடிவு பண்ணி, நாலு சென்டர்களை திறந்துட்டாவ... ''இப்படி, சின்ன சின்னதா சென்டர் அமைக்கிறதுக்கு பதிலா, 1,000 படுக்கை வசதியோட, சிறப்பு மையம் அமைக்கலாமேன்னு, அதிகாரிகள் ஆலோசனை செஞ்சாவ வே..
.''இதன்படி, வடபழஞ்சியில தயாராகிட்டு இருக்கிற, ஐ.டி., பார்க்ல, கோவிட் கேர் சென்டர் அமைக்க திட்டமிட்டிருக்காவ... ''கூடுதல் கலெக்டர் பிரியங்காவை, இம்மையத்துக்கு பொறுப்பு அலுவலரா நியமிச்சு, பணிகளை முடுக்கி விட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''பதிவுத்துறையில பலே மோசடி நடக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சொத்து விற்பனை பத்திரப்பதிவுல தொகை வேறுபாடு வந்தா, சிலர் மேல்முறையீடு செய்வாங்க... துணை கலெக்டர் தலைமையிலான குழு, இதை விசாரிச்சு முடிவு எடுக்கும்... இதுல, மாவட்ட பதிவாளரின் ஆய்வு அறிக்கையை, முக்கிய ஆதாரமா எடுத்துக்குவாங்க...''ஆனாலும், மாவட்ட பதிவாளர் பரிந்துரைத்த மதிப்பை விட, சில பத்திரங்கள் குறைவான மதிப்புக்கு முடிக்கப்படுதுங்க...
''குறிப்பா, சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள்ல, இந்த மாதிரி, பல மேல்முறையீடுகள் முடிக்கப்பட்டு இருக்குங்க..
.''ஒவ்வொரு பத்திரத்துலயும், 8 லட்சம் ரூபாய் வரை, அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கு... பதிவுத்துறை, ஐ.ஜி.,யின் உறவினர்னு சொல்லி, சிலர் மிரட்டி காரியம் சாதிக்கிறதா புகார்கள் வருதுங்க... 'மேலிடம் வரைக்கும் புகார் குடுத்தும் நடவடிக்கை இல்லை'ன்னு, மாவட்ட பதிவாளர்கள் புலம்புறாங்க பா...'' என்றார் அந்தோணிசாமி.
''பத்திரப்பதிவு துறை சம்பந்தமா, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு ஓய்...'' என, முன்னுரை தந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டத்துல இருக்கற சார் - பதிவாளர் ஒருத்தர், போலி ஆவணங்கள், பிரச்னைக்குரிய ஆவணங்களை வச்சு, பத்திரப்பதிவு செய்து குடுத்து, லட்சக்கணக்குல பணம் பார்க்கறார்... பிரச்னைக்குரிய ஆவணம்னு யார் புகார் குடுத்தாலும், கண்டுக்க மாட்டேங்கறார் ஓய்..
.''அது சம்பந்தமா, கள ஆய்வுக்கும் போறதில்லை... யார் அதிகமா பணம் தராளோ, அவாளுக்கு சாதகமா பத்திரம் பதிவு பண்ணி குடுத்துடறார் ஓய்..
.''யாராவது தட்டி கேட்டா, சார் - பதிவாளர் தரப்புல இருந்து சிலர், அவாளை மிரட்டறா... இவர் மேல, ஐ.ஜி.,க்கு பல புகார்கள் போயிருக்கு ஓய்... ஆனா, நடவடிக்கை தான் ஒண்ணையும் காணோம்...'' என்றார், குப்பண்ணா.
''மணப்பாறை போயிட்டு வந்த நம்ம புலிப்பாண்டியன், முறுக்கு வாங்கிட்டு வந்திருக்காரு... நாளைக்கு சந்திக்கும்போது தர்றேன்...'' என, அந்தோணிசாமி கூற, மற்றவர்கள் அனைவரும், 'பை...' சொல்லி, இணைப்பைத் துண்டித்தனர்.


'கட்டிங்' வசூலில் கறார் போலீஸ் அதிகாரி!

ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், 'போன் கான்பரன்ஸ்' அழைப்பில், நண்பர்கள் சங்கமித்தனர். கருப்பட்டி காபியை பருகியபடியே,
''புதிய செயலர் நியமிக்க, கட்சியில கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்குது பா...'' என, விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பால இறந்துட்டதால, அந்த மாவட்டச் செயலர் பதவி காலியா கிடக்குது... அதைப் பிடிக்க, 20 பேர் கடுமையா போட்டி போடுறாங்க பா...''இளைஞரணி மாநில நிர்வாகிகள் இருவர், தங்களது ஆதரவாளரான, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசை, மாவட்டச் செயலரா நியமிக்க, கட்சி மேலிடத்துக்கு சிபாரிசு பண்ணியிருக்காங்க...
''ஆனா, 'கட்சியின் தலைமை அலுவலகமான, அறிவாலயம் இருக்கிற மாவட்டத்துக்கு, செயலரா வர்றவங்க, 'பவர்புல்'லா இருக்கணும்... சட்டசபை தேர்தல் வர்றதால, ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுத்து, அதிரடியா கட்சி பணியாற்றணும்... அதுக்கேத்த மாதிரி, சீனியர்களுக்கு வாய்ப்பு குடுக்கணும்'னு, மூத்த நிர்வாகிகள் தரப்புல வலியுறுத்தி இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கொரோனாவை வச்சு நல்லா கொழிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, வேறு விஷயத்திற்கு மாறினார், குப்பண்ணா.''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''சென்னை மாநகராட்சி, 181வது வார்டுல, கொரோனா தடுப்பு பணிக்கு, 60 களப்பணியாளர்களை நியமிச்சா... இதுல, வேலைக்கு வராமலே, 12 பேரின் பெயர்களை, போலியா வருகை பதிவேட்டுல பதிவு பண்ணியிருக்கா ஓய்...
''இதை சரிபார்க்க வேண்டிய சுகாதார ஆய்வாளர், கொரோனா பாதிப்பால, விடுப்புல போயிட்டார்... அதனால, ஒப்பந்த சுகாதார ஆய்வாளரிடம் கையெழுத்து வாங்கி, 12 பேரின் ஊதியத்தையும், சில அதிகாரிகள் சுருட்டியிருக்கா ஓய்...''குணமாகி திரும்பிய சுகாதார ஆய்வாளர், இந்த மோசடியை கேள்விப்பட்டு அதிர்ச்சி ஆகிட்டார்... 'பைல்களை ஆய்வு செய்ய, அதிகாரம் இல்லாத ஒப்பந்த சுகாதார ஆய்வாளரிடம் எப்படி கையெழுத்து வாங்கலாம்'னு உயர் அதிகாரிகள் கவனத்துக்கு, விவகாரத்தை எடுத்துண்டு போயிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கரூர் போலீஸ் அதிகாரியின் கறார் கதையை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்.
.''கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சப் - டிவிஷன்ல, காவிரி, அமராவதி, நங்காஞ்சி ஆறுகள் ஓடுது... இங்க இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்கள்ல இருந்து, மணல் கொள்ளை, கல் குவாரி, சேவற்கட்டு போட்டி மாமூல், மாசா மாசம், கரெக்டா வந்துரணும்னு, அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி கறாரா உத்தரவு போட்டுருக்காரு..
.''மாமூல் தராம, எந்தக் கட்சியினர் மணல் அள்ளினாலும், லாரிகளை பறிமுதல் பண்ணுங்கன்னும், கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்டிருக்காரு...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''நேத்து, 'டிவி'யில, நெஞ்சம் மறப்பதில்லை படம் பார்த்தேன்... கல்யாண் குமார் என்னமா நடிச்சிருக்காருங்க...'' என, அந்தோணிசாமி பேச, பெரியவர்கள், 'கான்பரன்ஸ் போன்' இணைப்பைத் துண்டித்து, மலரும் நினைவுகளில் மூழ்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26-ஜூலை-202009:14:43 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இந்த மாதிரி அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும். பிணம் தின்னும் கழுகுகள். இவர்கள் வீட்டில இருக்கும் பெண்கள் இதையெல்லாம் கண்டிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X