பொது செய்தி

இந்தியா

மாண்டரின் மொழி கற்கும் இந்தோ திபெத் வீரர்கள்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

டேராடூன்:சீன ராணுவத்துடனான பிரச்னைகளை எளிதாக கையாளும் விதமாக இந்தோ திபெத் படையினர் சீன மொழியான மாண்டரி்ன் மொழியை கற்க துவங்கி உள்ளனர்.



latest tamil news




இது குறித்து இந்தோ திபெத் படை பிரிவை சேர்ந்த அதிகாரி கூறியிருப்பதாவது: உத்தரகண்ட் மாநிலம் சீன எல்லையுடன் சுமார் 350 கி.மீ., வரையில் பகிர்ந்து கொண்டுள்ளது.


latest tamil news



கடந்த சில மாதங்களாக மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்றழைக்கப்படும் சீன ராணுவம் உத்தரகண்ட் மாநிலம் மட்டுமல்லாது பல்வேறு மாநில எல்லையில் பிரச்னையை உருவாக்கி வருகிறது.

சீன ராணுவத்தின் பிரச்னையை சமாளிக்கும் வகையில் இந்தோ திபெத் (ஐ.டி.பி.பி) போலீஸ் படை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்க சீன மொழியான மாண்டரின் மொழி கற்று தரப்படுகிறது. இது தகவல் தொடர்பு இடைவெளியை குறைக்க உதவியாக இருக்கும். மேலும் சிக்கலான நேரங்களில் நிலைமையை சமாளிக்க உதவும்.

லடாக் பகுதியை சேர்ந்த கால்வான் சம்பவத்திற்கு பின்னர் எல்லைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள படைகளில் பல்வேறு மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. என அதிகாரி கூறினார்

இதனிடையே கடந்த 17 ம் தேதி ஐடிபிபி தலைவர் தேஸ்வால் உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தின் எல்லைப்பகுதிகள் பிரச்னை மற்றும் உள்கட்டமைப்பு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூலை-202010:56:46 IST Report Abuse
தல புராணம் மாநிலங்களில் இந்தி திணிப்பு.. பார்டரில் சீன மொழி.. அப்புறம் படிப்படியா மாநிலங்களிலும் சீன மொழி.. கட்சி மோடியோட பாஜக தான்..
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
26-ஜூலை-202009:35:30 IST Report Abuse
K.ANBARASAN சீனன் சீனன் ஆகவே இருக்கிறான். ஆனால் நாம் தான் சீனன் ஆக மாறுகிறோமோ என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
26-ஜூலை-202007:35:28 IST Report Abuse
Pats தமிழனுக்கு வேற்று மொழி தேவையில்லை. நாம் கிணற்றுத் தவளையாகவே இருந்து மறைந்துவிடுவோம். நாம்தான் தமிழையே ஒழுங்காக கற்றுக்கொள்வதில்லையே. ஆனால் தமிழ், தமிழன் என்று மரத்தில் ஏறி நின்று கூவுவோம். நம் தமிழர்கள் ஏன் இப்படி மொழிவெறி பிடித்து அலைகிறார்கள் என்ற கேள்வி என்னுள் அடிக்கடி எழும். ஒரு தமிழனிடம் சென்று தமிழ்தான் சிறந்த மொழி என்று சொல்வதால் என்ன பயன்? அவனுக்கு அதேபோன்று தமிழே அறியாதவனிடம் சென்று தமிழ்தான் சிறந்த மொழி என்று சொல்வதால் என்ன பயன்? இரண்டுமே பயனற்ற செயல்கள் அல்லவா?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூலை-202010:59:44 IST Report Abuse
தல புராணம்ஆமா இவரு ஹிந்தி கத்துக்கிட்டு பானி பூரி பிசினஸ் மேக்னெட் ஆவப் போறாரு .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X