சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

ஹிந்துக்களுக்கு எதிரான கருப்பர் கூட்டம் பின்னணியில் தி.மு.க .,அம்பலம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (125)
Share
Advertisement
ஹிந்துக்கள், கருப்பர் கூட்டம் பின்னணியி,அம்பலம்

சென்னை: ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும், கருப்பர் கூட்டம் கும்பலின் பின்னணியில், தி.மு.க., இருப்பது அம்பலமாகி உள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து, கருப்பர் கூட்டம் வெளியிட்ட, 'யு டியூப் - வீடியோ' விவகாரத்தில் கைதாகியுள்ள செந்தில்வாசன், தி.மு.க.,வின், தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகியாக இருக்கும் 'திடுக்' தகவல், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கருப்பர் கூட்டம் என்ற, யு டியூப் சேனலில், ஹிந்துக்களின் மனம் புண்படும்படியாக, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப் பெருமானை போற்றி பாடும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது.இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிந்து அமைப்புகளும், ஹிந்து மக்களும், இந்த கும்பலுக்கு எதிராக கொந்தளித்தனர்.


சிறையில் அடைப்பு'இக்கூட்டத்தை தடை செய்ய வேண்டும்; வீடியோ வெளியிட்டவர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்; இக்கும்பலின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும்' என, உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் குரல் எழுப்பினர்.இதையடுத்து, கருப்பர் கூட்டத்தினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, பல்வேறு தரப்பினரும், போலீசில் புகார் அளித்தனர். தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவினரும் மற்றும் ஹிந்து அமைப்பினரும், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.

கருப்பர் கூட்டம், யு டியூப் சேனல் நிர்வாகிகளான, சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், 49; போரூர், சுரேந்தர் நடராஜன், 36, உள்ளிட்ட, நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அத்துடன், அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள், 'லேப்டாப்' உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், தி.நகரில் செயல்பட்டு வந்த அலுவலகத்திலும் சோதனை நடத்தி, வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை, போலீசார் கைப்பற்றினர்.


முக்கிய நிர்வாகி

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில்வாசனை, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, மூன்று நாட்கள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவர் தான், கருப்பர் கூட்டம், யு டியூப் சேனலின் முக்கிய நிர்வாகி என்பதும், செந்தில்வாசன் தலைமையில், மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருவதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், செந்தில்வாசன், தி.மு.க.,வின் 'ஐ.டி., அணி' எனப்படும், தகவல் தொடர்பு பிரிவில் முக்கிய பொறுப்பில் இருப்பது, அம்பலமாகி உள்ளது; இதை, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். இதனால், இவர்களுக்கு பின்னணியில், தி.மு.க., இருப்பது உறுதியாகி இருப்பதாக, போலீஸ் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சதி திட்டம்வெளிநாடுகளில் இருந்து, இவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறதா; இவர்களின் சதி திட்டம் என்ன? தொடர்ந்து ஹிந்துக்களின் மனம் புண்படும்படி, வீடியோ வெளியிட்டதன் பின்னணி என்ன; அதை ஊக்கப்படுத்தியவர்கள் யார் என்பது குறித்தெல்லாம், செந்தில்வாசனிடம், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.செந்தில்வாசன் மற்றும் அவரது கூட்டாளிகளின் வங்கி கணக்கு இருப்பு விபரங்களையும், போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
31-ஜூலை-202010:56:12 IST Report Abuse
Indhuindian கறுப்பர் கோட்டம் இந்து சமுதாயத்திற்கு எதிர்பாராமல் தூண்டி விட்டது. அதற்கு நன்றி சொல்லி இந்த இந்து மத ஒற்றுமையை மேலும் மேலும் உயர்த்தி இந்த நாத்திக கும்பலை நாட்டை விட்டே ஓட்ட வேண்டும். கனவிலும் ஆட்சிக்கு வரமுடியாத மாதிரி செய்து விடவேண்டும். வெளிப்படையாக நாத்திகம் பேசும் கும்பலும் அதற்க்கு பின்னால் இருந்து அவர்களை தூண்டி விடும் கும்பலும் புலி வாலெய் பிடித்துவிட்டார்கள் அது அவர்களை அடிக்காமல் விடக்கூடாது
Rate this:
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
31-ஜூலை-202010:45:49 IST Report Abuse
DSM .S/o PLM இன்னும் கூட இதை புரிந்து கொள்ளாமல் ஒரு இந்து திமுக வை ஆதரிக்கிறான் என்றால் அவன் இந்து அல்ல .
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
31-ஜூலை-202009:36:48 IST Report Abuse
Indhuindian கைப்பூணுக்கு கண்ணாடி வேணுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X