மூன்றாவது முறையாக அரபு எமிரேட்சில் 24 மணிநேரத்தில் தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சில் ஜூலையில் தற்போது மூன்றாவது முறையாக 24 மணிநேரத்தில் தொற்றால் யாரும் பலியாகவில்லை என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) கொரோனா தொற்று பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை. இந்த மாதத்தில்மூன்றாவது முறையாக (24 மணிநேரத்தில்) எந்தவொரு நபரும் தொற்றால் பலியாகவில்லை என அந்நாட்டின் சுகாதாரதுறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அத்துடன் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்து மேலும் 393 பேர் குணமடைந்துள்ளனர்.


latest tamil news



அரசு தகவல்களின்படி, நாட்டில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 58,562 ஆக அதிகரித்தது. தொற்று நோயில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,628 ஆக உயர்ந்துள்ளது. அரபு எமிரேட்சில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 343 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 52,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதே போல் ஜூலை 15 ல் அரபு எமிரேட்சில் ஒரு நாளில் யாரும் பலியாகவில்லை என அபுதாபியின் மகுட இளவரசர் ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
26-ஜூலை-202014:11:27 IST Report Abuse
Raj வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
T.R.MAHEND - Madurai,இந்தியா
26-ஜூலை-202008:37:46 IST Report Abuse
T.R.MAHEND மக்கள் தாய் நாட்டுக்கு திரும்புகின்ரானர்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
26-ஜூலை-202008:16:41 IST Report Abuse
Sampath Kumar சேவைக்கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் பொது ஷார் ஆட்டோவில் என்ன பெருமிதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X