கொரோனாவிலிருந்து காக்கும் உடற்சக்தி!

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
உலக மக்களை பீதியில் ஆழ்த்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய அறிவு சார்ந்த உண்மைகளும், அதை எதிர்கொள்ளும் உடலிலுள்ள எதிர்ப்பு சக்திகளும்:கொரோனா வைரஸ் சற்று வித்தியாசமான, ஆர்.என்.ஏ., வகை வைரஸ். இந்த வைரசை சுற்றி, கையுறை போன்று புரதம் உள்ளது. அது, கொழுப்பால் ஆனது. இதனால் தான், அந்த கிருமி ஒட்டியிருந்தால், அதை அகற்ற, கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு, கை, கால்களை
 கொரோனா, உடற்சக்தி!

உலக மக்களை பீதியில் ஆழ்த்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய அறிவு சார்ந்த உண்மைகளும், அதை எதிர்கொள்ளும் உடலிலுள்ள எதிர்ப்பு சக்திகளும்:கொரோனா வைரஸ் சற்று வித்தியாசமான, ஆர்.என்.ஏ., வகை வைரஸ். இந்த வைரசை சுற்றி, கையுறை போன்று புரதம் உள்ளது. அது, கொழுப்பால் ஆனது.

இதனால் தான், அந்த கிருமி ஒட்டியிருந்தால், அதை அகற்ற, கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு, கை, கால்களை கழுவினால், இந்த வைரஸ் இறந்து விடுகிறது. இந்த வைரசின் மேல் உறையின் மீது, முட்கள் போல் இருக்கும். இதற்கு, கொரோனா - 19 என்று பெயர்; சார்ஸ் சி.ஓ.வி., 2 வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.
தடுப்பு மருந்து

இந்த வைரஸ், உயிரினங்களின் திசுக்களில் ஒண்டி வாழ்வதால், இது ஒட்டுண்ணி என்றும் அழைக்கப்படுகிறது. அப்போது தான், இது வாழ முடியும். சில உதிரி கட்சிகள், பெரிய கட்சியோடு சேர்ந்து இருப்பது போல, இந்த வைரஸ், திசுக்களில் ஒண்டி வாழ்கிறது. 'இன்புளுவென்சா' வைரஸ், மூச்சுக்குழாயில் தங்கி, தும்மல், இருமல், சளியில் பரவுவது போல, இந்த கொரோனா வைரஸ், தும்மல், இருமல் மூலம் வெளியேறி, அருகில் உள்ளோருக்கு, மூச்சுக்காற்று வழியாக விரைவில் பரவி வருகிறது.மூச்சுக்குழாய் வழியாக, தொண்டையை அடைந்து, தொண்டைக் குழாயின் மெல்லிய திசுக்களை தாக்குகிறது. இதனால், தொண்டை வலி ஏற்படலாம். இந்த நேரத்தில், நம் உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி, இந்த வைரசை தாக்க துவங்குகிறது.நோய் எதிர்ப்பு சக்தியானது, நாம் பிறந்தவுடன், இயற்கையாக உடலில் ஏற்பட்டு, உடலை காக்கிறது. சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத்திறன், இது முதலில் வந்த நோய்களுக்கு, நாம் எடுத்துக் கொண்ட தடுப்பு மருந்தால் வருகிறது.உதாரணமாக, மஞ்சள் காமாலை நோய்க்கு எதிர்ப்பு சக்தி, இப்படித் தான் உண்டாகிறது.வைரஸ், பாக்டீரியா போன்றவை, நம் உடலுக்குள் நுழைந்து, நோயை விளைவிக்கும். இந்த அன்னிய சக்தியை, 'ஆன்டிஜென்' என்கிறோம். இதை எதிர்த்து, நம் உடலில் உருவாகும் சக்தி, 'ஆன்டிபாடி' அல்லது நோய் எதிர்ப்பு சக்தி என்கிறோம்.இந்த நோய் எதிர்ப்பு சக்தி, பிறப்பொருள் எதிரி எனப்படும். எதிர்ப்பு சக்தி வீரர்களான லுாக்கோசைட், லிம்போசைட், மோனோசைட் போன்றவை, உடலில் மற்றொரு எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.நிணநீர் கட்டிகள் மற்றும் அதை சார்ந்த நிணநீர்க் குழாய்களை, ஆங்கிலத்தில், 'லிம்பாடிக் நோடு' என்கிறோம். இது, 'டி கில்லர் செல்' என்ற கொலைகார செல்லை அனுப்பி, வைரசை அழித்து, அதை, நிணநீர் குழாய் மூலம் வெளியேற்றுகிறது.அதையும் மீறி, வைரஸ் தாக்கினால், 'பி செல்' பிரம்மாஸ்திரமாக தாக்கி அழிக்கிறது. அந்த, பி செல், டி செல் அழித்த வைரஸ்களை, சுகாதார பணியாளர் போல வெளியேற்றுகிறது. இந்த இரண்டு செல்களும் சேர்ந்து, வைரஸ் பெருக்கத்தை முழுமையாக அழித்து விடுகின்றன; உடலை சுத்தமும் செய்கின்றன.வேதியியல் மாற்றமான சைட்டோகேன் புயல்

வைரஸ், மூச்சுக் குழாயில் படிந்து, 'எபீதிலியல்' என்ற கண்ணாடி போன்ற திசுக்களில், வைரசின் மேலுள்ள முட்கள், துவாரம் செய்து, செல்கள் உள்ளே நுழைகின்றன. வைரஸ் இனப்பெருக்கம், 'ஜெராக்ஸ்' காப்பி போல பெருகுகிறது.

இந்த நேரத்தில், திசுக்களிலிருந்து, 'சைட்டோகேன்' மற்றும் 'இன்டர்லுாகான்' என்ற வேதியியல் பொருட்கள் வெளியேறி, வைரசையும், அதன் பெருக்கத்தையும் தடுக்கிறது. இந்த தாக்கத்தால், சில நேரத்தில் வியாதி அதிகரிக்கலாம்.கொரோனா தாக்கத்தை அறிய, பரிசோதனை கருவி, நாடித்துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளப்பான் என்ற, 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' உதவுகின்றன.
ஆலோசனை


வைரஸ் தாக்குதலில் பின்பு, மூச்சு விட சிரமம் ஏற்படுகிறது. இதனால், நுரையீரலுக்கு வேலையான, பிராண வாயு ரத்தத்தில் கலப்பது தடைபடுகிறது. இதை, 'ஹைபாக்சியா' என்கிறோம்.இது, கடுமையான கொரோனா தாக்கலை தெரிவிக்கும். இந்த பரிசோதனையை, கை விரல் முனையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.இந்த பரிசோதனை மூலம், பிராண வாயுவின் அளவு, 90 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால், மருத்துவர் அல்லது மருத்துவமனைக்கு, மருத்துவ ஆலோசனைக்கு செல்ல வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தி எங்கே; எப்படி கிடைக்கிறது என்பதை அறிதல் அவசியம்.நம் ரத்தத்தில், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள், திரவமான பிளாஸ்மா போன்றவை இருக்கின்றன. சிவப்பணுக்கள், ஆக்சிஜன் என்ற பிராண வாயுவை, நுரையீரலில் இருந்து எடுத்து, உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் கொடுக்கிறது.வெள்ளையணுக்கள், நம் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் போல, உடலை காக்கும் எதிர்ப்பு சக்தியுடன் விளங்குகின்றன. இவை, ஐந்து வகைகளாக உள்ளன.நம் நாட்டு பாதுகாப்பு, ராணுவ அரண் போல, எதிரி வந்தால் எப்படி போராடுகிறோம்; எந்தெந்த ஆயுதங்களை, எப்படி எல்லாம் உபயோகப்படுத்துகிறோம் என்பது போல, இந்த, ஐந்து வகை வெள்ளை அணுக்கள், நோய்த் தொற்று ஏற்படும் போது செயல்படுகின்றன.1. 'நியூட்ரோபில்' என்ற நடுவமை நாடிகள்.

இது, வைரசோ, பாக்டீரியாவோ உடலில் நுழைந்தால் அதைத் தாக்கி அழித்து விடுகிறது. இது தான், நம் உடலின் காவலாளி போல, தினமும் பாதுகாக்கிறது.இதன் பிறப்பிடம், எலும்பிலுள்ள மெல்லிய மஜ்ஜை பகுதி.2. 'லிம்போசைட் 'என்ற நிணநீர் செல்கள்.

இவ்வகை வெள்ளையணுக்கள் வைரசோ, பாக்டீரியாவோ உடலில் நுழைந்து விட்டால், இது, தனியாகவே கிருமிகளை தாக்கி அழிக்கிறது. இதுவும், எலும்பிலுள்ள மஜ்ஜை பகுதியில் இருந்து தான் பிறக்கிறது. மற்றொரு பிறப்பிடம், லிம்ப்நோடு என்ற நிணநீர் கட்டிகள்.3. 'மோனோசைட்' என்ற ஒற்றைக் குழியம்.

இது, எந்தவொரு வைரசையும், பாக்டீரியாவையும் விழுங்கி விடுவதால் இதற்கு, 'மேக்ரோபேஜ்' விழுங்கணுக்கள் எனப்படும்.இது, மற்ற வெள்ளை அணுக்கள் உடனோ, தனியாகவோ வைரசை அழித்து, வைரசால் தாக்கப்பட்ட நிணநீர் குழாய்கள் மூலம் வெளியேற்றுகிறது. இதன் பிறப்பிடம், எலும்பு மஜ்ஜையில் உள்ள பல்வகை திறன் கொண்ட, 'ஸ்டெம் செல்' திசுக்கள். இதனால் தான், இது, பல முனை தாக்குதலை, வைரஸ் மற்றும் பாக்டீரியாவிடம் காட்டுகிறது. எலும்பை வலிமையாக்க தேவை: விட்டமின் டி 3 கால்சியம், ரிசிவட்ரால்.4. இசினோபில் என்ற இயோசி நாடிகள்


5. பேசோபில் என்ற கார நாடிகள்.
நீரிழிவு நோயாளிகளை, கொரோனாவிலிருந்து காப்பாற்றுவது எப்படி?


நீரிழிவு நோயுள்ளவர்கள், தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியாக கட்டுப்படுத்த வேண்டும். மூன்று மாத சராசரி சர்க்கரை அளவீடான, எச்.பி.ஏ., 1 சி என்ற பரிசோதனையில், 7 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.காரணம், ஒரே அளவில் சீராக சர்க்கரை அளவு உடலில் இருந்தால் தான், உடலிலுள்ள உறுப்புகளின் திசுக்களும், ரத்தத்தின் சர்க்கரையும் போய், விட்டமின் சி, டி3, ஜிங்க், ரிசிவட்ரால் போன்ற நல்ல எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். விட்டமின் சி, டி3, ஜிங்க் மாத்திரைகளையும் அவசியம் மருத்துவர் ஆலோசனை பெற்று, சாப்பிடலாம்.
இதய நோயாளிகள்:

ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள், தவறாமல் அதற்குரிய மாத்திரைகளையும், ரத்தம் உறைவதை தடுக்கும், 'ஆஸ்பிரின்' அல்லது 'குளோபிடோகிரல்' மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும்.சமீபத்தில், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள மருத்துவர்கள், கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் உடலை, பிரேத பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டதில், அவர்கள் கண்டறிந்த உண்மை முடிவு.இந்த கொரோனா வைரஸ், ரத்தக்குழாயின் உட்பகுதியில் படர்ந்திருக்கும் திசுக்களை, அதாவது, 'எண்டோதீலியத்தை' பாதித்து ரத்த நாளத்தை அடைக்கிறது.மேலும், இந்த வைரஸ் தட்டணுக்கள் மூலம், ரத்தத்தை உறைய செய்து விடுகிறது.குறிப்பாக, நுரையீரலில் சிறிய ரத்த நாளங்களை அடைக்கிறது. இதனால், மூச்சு அடைப்பு ஏற்பட்டு, 'வென்டிலேட்டர்' வரை செல்ல நேர்கிறது.
ஆரம்ப கால அறிகுறிகள்
காய்ச்சல்:

எல்லா காய்ச்சலையும், கொரோனாவாக நினைத்து பயப்பட வேண்டாம். உடலின் உஷ்ண அளவை பார்த்துக் கொள்ளவும். சாதாரணமாக பயப்பட தேவையில்லை. ஆர்.சி.டி., போன்ற பல பரிசோதனைகளை மேற்கொண்ட பின் தான், கொரோனா காய்ச்சல் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு, ரத்த பரிசோதனைகளும் பல உள்ளன. இதில், கொரோனா இருந்தால் பயப்பட வேண்டும். வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும்.நல்ல ஆகாரம், எதிர்ப்பு சக்தி கொடுக்கும் விட்டமின் சி, டி3, ஜிங்க் மாத்திரைகள் மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.மஞ்சள் கலந்த வென்னீர் மூலம் ஆவி பிடிக்கலாம். இதனால் வைரஸ் அழிக்கப்படுகிறது. மூச்சிரைப்பு இருந்தால், மருத்துவரை அணுகலாம். மூச்சுக்குழாய், நுரையீரலுக்கு செல்லும் ரத்தக்குழாய்களான, பீராங்கியல், பல்மனரி' ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுக்குழாயும், நுரையீரலும் உடனடியாக நின்று விடுகிறது.இதை, 'ரெஸ்பிரேட்டரி பெய்லியர்' என்கிறோம். இதனால் தான் வென்டிலேட்டரில் இருந்து மீள முடியாமல் மரணம் அடைகின்றனர்.சாதாரணமாக, வென்டிலேட்டரில் இருக்கும், நீண்ட நாள் மூச்சுக் குழாய், ஆஸ்துமா தொல்லை உள்ளவர்கள், சில நாட்களில் மீண்டு விடுவர். இதுபோல, 'ஹார்ட் பெயிலியரிலும்' மீண்டு விடலாம்.எந்தவொரு வைரசும், மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலை பாதிக்கும் போது, நுண்கிருமிகளான பாக்டீரியாவும் சேர்ந்து தான் தாக்கி, நிமோனியாவை உண்டாக்கும். இதை எளிதில் குணப்படுத்தலாம். நாம் இதுவரை பார்த்த நிமோனியா இதுபோல தான்.
பெரும்பாலான வல்லுனர்கள் கருத்து:

இந்த வைரஸ் நோய், சமூகத்தில் பரவி, பின் தானாக குறையும். இது, 'செல்ப் லிமிடெட் டீசிஸ்' எனப்படும்.புதிதாக வந்துள்ளதால், கருத்து தான் கூற முடியும். அறுதியிட்டு, உறுதியாக எதையும் கூற இயலாத நிலை.நிதர்சன உண்மை. இது, மீடியாக்களில் பெரிதாக்கப்படுகிறது.
வெளியில்

விலகி இரு, முக கவசம் அணிந்திரு, கொரோனா வைரஸ் மூச்சுக்குழாய் வழியாக தான் உள்ளே செல்லும். இதைத் தவிர்க்க, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.
வீட்டில்

நல்ல ஆகாரம், உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, எதிர்ப்பு சக்தி கொடுக்கும் உணவு மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள் மிகக் கவனமாக இருத்தல் நல்லது.
தேவைப்படுவது

இன்று, உலகம் முழுதும் தேவைப்படுவது, உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ஆகாரங்கள் தான். அவற்றை உட்கொள்ளவும். விட்டமின் சி, டி3, ஜிங்க் மற்றும் ரிசிவட்ரால் மாத்திரைகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகளை தேடிப்பிடித்து உட்கொள்வதை விட, இந்த மாத்திரைகளை கொரோனா காலத்தில் உட்கொள்வது, உடலை வலிமையாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கியும் நன்மை அளிக்கும்.பேராசிரியர் டாக்டர் சு. அர்த்தநாரி
தொடர்புக்கு:இ - மெயில்: prabhuraj.arthanaree@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (1)

sudharman - chennai,இந்தியா
31-ஜூலை-202016:51:17 IST Report Abuse
sudharman நன்றி. மிக எளிமையாக தெளிவாக எவரும் புரிந்து கொள்ளும்படி இருக்கிறது. தேவையற்ற பயமுறுத்தல்கள் அதிகமான அறிவியல் பெயர்கள் இல்லாமல் இருந்தது. சிம்ப்லி சூபர்ப்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X