பொது செய்தி

தமிழ்நாடு

நாய்களை நேசிக்கும் மெக்கானிக்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 நாய்களை நேசிக்கும் மெக்கானிக்

விருதுநகர்:'நாயிற்கிடையாய் கிடந்த அடியேற்கு' என திருவாசகத்தில் 'தான் நாய்க்கும் கீழானவன்' என மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் கூறுவார். அதற்காக நாய் கீழான உயிரினம் என்று அர்த்தமில்லை. நாம் கூட நன்றி மறக்கலாம்,நாய் நன்றி மறப்பதே இல்லை என்பதே இதன் பொருள்.

நாய்கள் வீட்டு விலங்குகள். தற்போதைய காலகட்டத்தில் கலப்பின நாய்கள், ஜாதி நாய்களுக்கு மவுசு உண்டு. இதிலும் கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற நாட்டு நாய்களுக்கும் தனி அங்கீகாரம் உள்ளது. நாட்டு இனங்கள் காவலிலும், நன்றியிலும் உயர்ந்தவை. காலப்போக்கில் நாட்டு இனங்கள் அழிந்து தற்போது எஞ்சியிருப்பவை நாட்டு கலப்பின நாய்களே.

இவ்வகை நாய்களை பராமரிப்பது சாதாரண விஷயமில்லை. விருதுநகரை சேர்ந்த மெக்கானிக் சிவயோகன் 150க்கு மேற்பட்ட நாய்களுக்கு உணவளித்து பாதுகாத்து வருகிறார். இவர் இளம் வயதில் ராமு என்ற நாயை வீட்டில் வளர்க்க துவங்கினார். அந்த நாய் வந்த ராசியால் அவருக்கு நிலையான தொழிலும், நிம்மதியான வாழ்க்கையும் கிடைத்தது.

அதற்கு பின் பார்க்கும் நாய்களுக்கு உணவளிக்க துவங்கினார். தீவிர சிவபக்தரான இவர் நாய்களை பைரவராகவே நினைத்து வழிபடுகிறார். நாய்களுக்காக தினசரி 15 கிலோ அரிசியில் சாதம், அதனுடன் கோழிக்கால் போன்ற இறைச்சியை சமைத்து பல இடங்களுக்கு சென்று உணவாக வைக்கிறார். மதுரை ரோட்டில் இவரது ஒர்க் ஷாப் அருகில் ஒரு நாய்க்கூட்டமே உள்ளது.

இவரது டூவீலர் சப்தம் கேட்டால் அவை தனி ஆனந்தத்துடன் ஓடி வருகிறது. இவரது சேவையும் பாராட்டுக்குரியதே.தன்னிறைவை தருகிறதுநாய்களுக்கு உணவளிப்பது மனதுக்கு மகிழ்ச்சி, தன்னிறைவை தருகிறது. சம்பாதிக்கும் பணத்தில் ரூ.300 ஐ நாய்களுக்காகவே ஒதுக்கிவிடுகிறேன்.

சிவயோகன், மெக்கானிக்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X