தமிழ்நாடு

வழிகாணுங்க மருத்துவமனைகளில் இல்லை வெந்நீர்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 வழிகாணுங்க   மருத்துவமனைகளில் இல்லை வெந்நீர்

ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , ஆரம்பசுகாதார நிலையங்களில் உள்நோயாளிகளாக தங்கி உள்ள நோயாளிகள் வெந்நீர் கிடைக்காமல் டீ கடைகளை நாடும் நிலை தொடர்கிறது. இதன் மீது மருத்துவமனை நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் பிரசவம், விபத்து மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உள் நோயாளிகளாக ஏராளமானோர் உள்ளனர். இவர்களுக்கான குடிதண்ணீர் மிகுந்த பற்றாக்குறைக்கு மத்தியில் கிடைத்து வருகிறது. இதிலும் இங்கு வெந்நீர் வசதி இல்லாததால் அருகிலுள்ள டீக்கடைகள், ஓட்டல்களை நாடுகின்றனர். அவர்களும் மனித நேயத்துடன் வழங்கினாலும் இரவு நேரங்களில் வெந்நீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மருத்துவமனைகளில் ஏதோ வசதிக்காக லட்சங்களை செலவிடும் மருத்துவமனை நிர்வாகம் வெந்நீர் கிடைக்கு வழி வகை செய்யலாம்.இதற்கு பெரியளவில் நிதி தேவைப்படாது. தன்னார்வலர்களை நாடினாலே அவர்கள் மூலம் வசதியை ஏற்படுத்தலாம். ஆனால் இதை செயல்படுத்துவதில் ஏனோ அலட்சிம் காட்டுகிறது. மாவட்ட அரசு நிர்வாகமாவது இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


24 மணிநேரமும் அவசியம்

இன்றைய வாழ்க்கை சூழலில் வசதியற்றவர்கள் அரசு மருத்துவமனைகளை நம்பியே உள்ளனர். இவ்வாறு வருபவர்கள் இங்கு பல்வேறு வசதிகுறைபாடுகள் இருந்தபோதிலும் சகித்து கொண்டு தான் சிகிச்சை பெறுகின்றனர். இதில் வெந்நீருக்கு படும் சிரமம் மிகவும் அதிகம். அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் வெந்நீர் வசதி செய்து தருவது மிக அவசியமாகிறது.

- சோலையப்பன், தொழில் முனைவோர், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X