விருதுநகர்,:விருதுநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக டூவீலர்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி முறையின்றி நடப்பதால் அதை அடுத்த சில மணி நேரத்திலே கிழித்து போடும் நிலை தொடர்கிறது.
கொரோனா தொற்றால் மெயின் பஜார் பகுதியில் டூவீலர் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே பொருட்கள் வாங்க வாகனங்கள் வரும் வகையில் நீலம், பச்சை, சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இனி இந்த வாகனங்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நகர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.
வாகன எண் விவரம் சேகரிக்கப்படாது ஒட்டுவதால் வாகன ஓட்டிகள் வீட்டிற்கு சென்ற பின் கிழித்து விடுகின்றனர். சிலர் ஸ்டிக்கர் ஒட்டுவதில் இருந்து தப்பிக்க பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்று பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு பொடிநடையாக பஜார் செல்கின்றனர்.
இதை போலீசார் துணையுடன் முறைப்படுத்தினால் மட்டுமே இதற்கு ஓர் தீர்வு கிடைக்கும். இல்லாவிடில் தினமும் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டும் நிலை தொடரும். கூட்டமும் குறையாது தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கதான் செய்யும். நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி :ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE