பொது செய்தி

தமிழ்நாடு

மேலமுந்தலில் மணம் பரப்பும் தாழை மரம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 மேலமுந்தலில் மணம் பரப்பும் தாழை மரம்

சாயல்குடி:மேலமுந்தல் தாழையடிஏழுபிள்ளை காளியம்மன்கோயில் பகுதியில் வளர்ந்துள்ள தாழை மரங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருகிறது.

தாழையின் தாவரவியல் பெயர் பாண்டனஸ் டெக்டோரியஸ் ஆகும். 15 அடி உயரம் வரை வளர்ந்துஉள்ளது. அடிமரத்தில் விழுதுகள் உள்ளது. இதன்பூவில் ஆண், பெண் வேறுபாடு காணப்படும்.ஆண் பூக்கள்மணமிக்க தாழ்பூவாக வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.ஆண் மலர் காய் காய்ப்பதில்லை. பெண் வகையில் பூவும்,காயும் அன்னாசிப்பழம் போல் காணப்படும்.

மன்னார் வளைகுடாவில் உள்ள நல்லதண்ணீர் தீவு, புளுகுனி சல்லித்தீவு, உப்புத்தண்ணீர் தீவுஉள்ளிட்ட தீவுப்பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்துள்ளன.கோயில் பூஜாரி முனியசாமி 65, கூறியதாவது:ஏழு பிள்ளைக்காளியம்மன் சிறு கோயிலின் வளாகத்தில் அடர்ந்து தாழை மரங்கள் வளர்ந்துஉள்ளன. சுற்றுவட்டாரப்பகுதியில் இம்மரங்கள் காணப்படுவதில்லை.

அம்மனை வழிபடுவோர், தாழை மரங்களை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். மண்ணரிப்பு, கடல் சீற்றம் உள்ளிட்டபேரிடரைத்தடுக்க தாழைமரங்களை கடற்கரைப் பகுதிகளில் வளர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X