பொது செய்தி

தமிழ்நாடு

குறுவனக்காட்டில் கூவுது குயில், பறக்குது பட்டாம்பூச்சி பல்லுயிர் பெருக்கத்தில் அசத்தும் அரசு பள்ளி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 குறுவனக்காட்டில் கூவுது குயில், பறக்குது பட்டாம்பூச்சி பல்லுயிர் பெருக்கத்தில் அசத்தும் அரசு பள்ளி

தேவதானப்பட்டிசில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு ஏக்கரில் அடர் குறுவனக்காடு அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல வகை பறவைகள், பட்டாம்பூச்சிகள் தஞ்சமடைகின்றன.

இப்பள்ளியில் அடர் குறுவனக்காடு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. ஜப்பான் விவசாய முறையிலான 'மியாவாக்கி' வகையைசேர்ந்தது. 3 அடிக்கு ஒரு கன்று வீதம் மாணவர்கள் தலா ஒரு கன்று என 750 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், பூச்சிகள் பறவைகளின் உணவு சங்கிலியை உருவாக்கவும், ஆக்சிஜன் அளவை உயர்த்தி ஆரோக்கியமான காற்றை சுவாசிக்கவும் இக்காடு உருவாக்கப்பட்டது.

இயற்கை சூழலில் கற்றல்இதில் கொய்யா, மாதுளை, நாவல், பூவரசு, குமிழ், தேக்கு, நீர் மருது, செஞ்சந்தனம், மகோகனி, அரநெல்லி, பெருநெல்லி, மலைவேம்பு, நிலவேம்பு, மா உள்ளிட்ட 22 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. சுத்தமான காற்று , தியான உணர்வில் சுவாசிக்கவும் பாடம் கற்கவும் வனத்தின் நடுவில் 40 மாணவர்கள் தரையில் அமரும் வகையில் வெற்றிடம் உள்ளது. இயற்கையான இச் சூழல் மாணவர்களுக்கு கற்றலை இனிமையாக்குகிறது.குயில், தவிட்டுக்குருவி, காடை செம்பூத்து, சிட்டுக்குருவி, பல வண்ண பட்டாம் பூச்சிகள் வந்து தஞ்சமடைகின்றன.


பராமரிப்பு



தலைமை ஆசிரியர் மோகன் கூறியதாவது:குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாட்களில் பள்ளி வளாகத்தில் குறுவனக்காடு உள்ளிட்ட இடங்களில் என மொத்தம் 1200 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம். மாணவ பாராளுமன்ற பொறுப்பாளர்கள், பசுமைப்படையினர் பராமரித்து வருகின்றனர். இதனால் நிலத்தடிநீர் சேமிக்கப்பட்டு பசுமையான சூழல் உருவாகியுள்ளது. இக்காடு மூலம் பறவைகளுக்கு இரை கிடைத்து வருகிறது, என்றார்.
தொடர்புக்கு 89409 11011

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X