சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 கொள்ளையர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

கோவை:கோவையின் பல்வேறு பகுதிகளிலும் மர்மநபர்கள் இரவில், வீடுகளை நோட்டமிடும் செயல் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன், இருகூர் தீபம் நகரில் இரவில் ஏழு பேர் அடங்கிய கும்பல் வீடுகளை நோட்டமிடுவது கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியிருந்தது. சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை பீளமேடு குரு கார்டன் பகுதியில் மீண்டும் அதேபோன்று மர்மநபர்களில் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.குடியிருப்புகளுக்குள் முகத்தை துணியால் மறைத்தப்படி மேலாடையின்றி மூன்று மர்மநபர்கள் வீடுகளை நோட்டமிடுவது கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகியிருந்தது. பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள், வீடுகளின் முன்பக்க கதவுகளை அடைத்தது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள நான்கு வீடுகளை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.போலீசார் கூறுகையில்,'சிறப்புக்குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X