பொது செய்தி

தமிழ்நாடு

விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்திற்கு ரூ.275

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:பிளஸ்2 விடைத்தாள் நகல், மதிப்பெண் மறு கூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூலை 30 வரை விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 16 ல் வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகல், மதிப்பெண் மறு கூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் வழியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275, மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, பிற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற பின்பே மறுமதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்கள் விண்ணப்பித்ததும் விண்ணப்பம், பதிவு எண், ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஜூலை 30 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X