பழநி கோயில் பாதுகாப்பை அதிகரிக்க யோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி கோயில் பாதுகாப்பை அதிகரிக்க யோசனை

Added : ஜூலை 26, 2020
Share
பழநி:கொரோனா ஊரடங்கிற்கு பின் பழநி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பை அதிகரிக்க ஆலோசனை செய்து வருகின்றனர்.பழநி மலைக்கோயிலில் தற்போது ஆறுகால பூஜைகள் மற்றும் கும்பாபிேஷக பணிகளும் நடந்து வருகிறது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.தற்போது மலைக்கோயில் 171 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஊரடங்கிற்குப் பின் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும்போது,

பழநி:கொரோனா ஊரடங்கிற்கு பின் பழநி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பை அதிகரிக்க ஆலோசனை செய்து வருகின்றனர்.பழநி மலைக்கோயிலில் தற்போது ஆறுகால பூஜைகள் மற்றும் கும்பாபிேஷக பணிகளும் நடந்து வருகிறது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது மலைக்கோயில் 171 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஊரடங்கிற்குப் பின் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும்போது, பாதுகாப்பையும் அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.மலைகோயிலில் அலைபேசியில் மூலவரை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது நடந்தது. எனவே மலைக்கோயிலுக்கு அலைபேசி கொண்டு செல்ல தடை விதித்து, அவற்றை அடிவாரம் மற்றும் மலைகோயிலில் பாதுகாக்க கட்டணம் விதிக்கவும், படிப்பாதையில் மெட்டல் டிடெக்டருடன் கூடிய தெர்மல் ஸ்கேனர் கருவியும் பொருத்தி, அதன் மூலம் காய்ச்சலுடன் கோயிலுக்கு வருவோரை உடனடியாக கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X