தமிழ்நாடு

கொடூர கொரோனாவின் கோர தாண்டவம் திண்டுக்கல்லில் அலட்சியத்தால் அதிகரிக்கும் பாதிப்பு;வேகமெடுத்த கொரோனா

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 கொடூர கொரோனாவின் கோர தாண்டவம் திண்டுக்கல்லில் அலட்சியத்தால் அதிகரிக்கும் பாதிப்பு;வேகமெடுத்த கொரோனா

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா பரவல் தொடங்கிய மார்ச் 24 முதல் முழுஊரடங்கு நீட்டிக்கப்பட்ட மே 17 வரை 115 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டு அதில் 80 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். தினமும் 2 அல்லது 3 பேர் வரை பாதிப்பதே அதிகபட்சமாக இருந்தது. ஒருவர் மட்டுமே உயிரிழந்திருந்தார்.

முழுஊரடங்கின் போது கொரோனாவின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.ஜூன் மாதம் குறிப்பிட்ட தளர்வுகளுடன் பொதுமக்கள் நடமாடவும், வணிக வளாகங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதிருந்து கொரோனாவின் பாதிப்பு மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது. அதுவரை ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு இரட்டை இலக்கத்திற்கு மாறியது. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.

தளர்வுக்குப்பின் பொதுமக்களின் அலட்சியப்போக்கும் அதிகரித்தது.வெளியூர்க்காரர்களால் பாதிப்புசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களை அரசு தனிமைப்படுத்தி சோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வந்தது. சிலர் இ- பாஸ் இல்லாமல் குறுக்கு வழியில் மாவட்டத்திற்குள் புகுந்து விட்டனர்.

பொதுமக்கள் உதவியோடு தனிமைப்படுத்தும் முன்பே அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து விட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது.இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தினர். அதே வேளை மதுரையில் கொரோனாவின் கோர தாண்டவம் உச்சகட்டமாக இருந்தது. மதுரை மார்கெட்டுக்கு சென்று திரும்பியவர்கள், உறவினர் வீட்டிற்கு, வேலைக்கு என அங்கு சென்று திரும்பியவர்கள் கொரோனாவால் பாதித்தனர். பொதுப் போக்குவரத்து தொடங்கியதே காரணமாக இருந்தது.

இதையடுத்து மீண்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல போக்குவரத்து தடை செய்யப் பட்டது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களால் அதிக பாதிப்பு, ஜூலை மாத தொடக்கத்திலிருந்து ஒருவர் மூலமாக வந்த கொரோனா என்ற அடிப்படையில் வேகமெடுத்தது. இதனால் தினமும் 50 முதல் 70 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 10 நாட்களில் மட்டும் தினமும் 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமே 200 ல் இருந்த பாதிப்பு இன்று 2000 ஐ நெருங்கியிருக்கிறது.எந்தவசதியும் இல்லையேமுதலில் கொரோனா பரிசோதனை மையம் மதுரை, தேனியில் மட்டுமே இருந்தது. திண்டுக்கல்லில் மாதிரிகள் எடுத்து அந்த நகரங்களுக்கு அனுப்பி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் முடிவு அறிவதில் தாமதமானது. பின்னர், அரசு மருத்துவமனையிலேயே பரிசோதனை தொடங்கி, நோயாளிகள் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை.ஆண், பெண் என அனைவருக்கும் ஒரே கழிவறை, தண்ணீர் வசதியில்லை. உணவு சரியில்லை. நாலைந்து நாட்களாக கொரோனா வார்டுகளில் முறயைாக சானிடைஸர் தெளிப்பதுகூட கிடையாது என்றும் கூறுகின்றனர்.

ஆக்சிஜன் சிலிண்டர் முடிந்தால் மாற்ற 20 நிமிடங்கள் ஆகிறது. அதற்கேற்ற நவீன கருவிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இன்று வரை உள்ளது. அதேநிலைமைதான் 13 தனிமைப் படுத்தும் மையங்களிலும்.அரசு ஊழியர்கள் பாதிப்புகொரோனா தொடங்கியதிலிருந்து காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரதுறை, மருத்துவத்துறை, துப்புரவு பணியாளர்கள் போன்றோர் களத்தில் பணியாற்றுகின்றனர். இவர்களில் மாவட்டம் முழுவதும் 11 மருத்துவர்கள் 15 செவிலியர்கள் இதர ஊழியர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், காவலர்கள் என காவல்துறையில் 17 பேர், 50 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதிக்கப்படுவதால் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை அளிப்பதில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தின் பங்குமாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்னரே சித்தா மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன் வரை அலோபதி மருத்துவமே அளிக்கப்பட்டது. சித்தாவுடன் கைகோர்த்த பின் கொரோனா பாதித்து குணமாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தொடக்க நிலையிலேயே சித்த மருத்துவமும் பரிந்துரைக்கப்பட்டிருந்தால் பாதிப்பு குறைந்திருக்கலாம்.

கொரோனா பாதிப்பு அதிகமானதால் எம்.வி.எம்., மகளிர் கல்லூரி, காந்திகிராம பல்கலை போன்றவை கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் 8 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.


பரிசோதனை செய்யுங்கள்

இணை இயக்குனர்சிவகுமார் கூறியதாவது:திண்டுக்கல் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதற்கான காரணம் பொதுமக்களின் அலட்சியமே. அரசு கூறும் வழிமுறைகள் எதையுமே பொதுமக்கள் கடைபிடிப்பதில்லை. காய்ச்சல், சளி இருந்தால் வீட்டிலேயே இருந்து கைமருத்துவமோ அல்லது மருத்து கடையிலோ மாத்திரை வாங்கி உட்கொள்கின்றனர். காய்ச்சல் வந்தாங் பரிசோதனை செய்ய தயங்குகின்றனர்.

மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். குறைகள் இருந்தால் கட்டாயம்விசாரணை செய்து களையப்படும், என்றார்.அரசு எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அலட்சியப்போக்கு தொடர்ந்தால் சென்னை, மதுரை போன்று திண்டுக்கல்லும் பெரும் உயிரிழப்புகளை சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X