தமிழ்நாடு

மாயமான குளங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 மாயமான குளங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா

கூடலுார்:கூடலுார் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப்பகுதிகளில் ஆக்கிரமிப்பால் பல குளங்கள் இருந்த இடமே தெரியாமல் மாயமாகியுள்ளன.

எஞ்சிய ஓரிரு குளங்களும் சீரமைக்காமல் இருப்பதால் இதனை நம்பிய விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலுார் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியான பளியன்குடி, வெட்டுக்காடு, லோயர்கேம்ப், கழுதைமேடு ஆகிய இடங்களில் சீகனேறி குளம், கடமான்குளம், புதுக்குளம், சடையன்குளம்,வெயிலடிச்சான்குளம் உட்பட 10 க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. இதில் கடமான்குளம், சீகனேறி குளம் தவிர மற்ற குளங்கள் மொச்சை, அவரை, இலவமரங்கள் விவசாயம் போன்ற ஆக்கிரமிப்பால் இருந்த இடமே தெரியாமல் மாயமாகியுள்ளன.

முறையாக நெல் விவசாயம் செய்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க வழியின்றி தவிக்கின்றன.கடமான்குளம் வெட்டுக்காட்டில் உள்ள இக்குளம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். 350 ஏக்கர் வரை பாசனப்பரப்பு இருந்தது. ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பின்றி குளம் 10 ஏக்கர் பரப்பளவு கூட தற்போது இல்லை.

விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடும் மடை முழுவதும் சேதமடைந்து விட்டது. 2 ஆண்டுகளுக்கு முன் இதனை சீரமைக்க சில விவசாய சங்கங்கள் முன்வந்தன. அதுவும் நடக்கவில்லை. இதற்கு அருகில் உள்ள சீகனேறி குளம் முழுவதும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு குளத்தின் கரைப்பகுதி மட்டுமே உள்ளது.

நிலத்தடி நீர்மட்டம்

மலையடிவார அனைத்து குளங்களிலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். எனவே ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமாகி உள்ள பல குளங்களை கண்டுபிடித்து ஆக்கிரமிப்பு அகற்றி சீரமைத்து நீர்தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பொதுப்பணித்துறை, கம்பம் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.


மெத்தனம்



செங்குட்டுவன், கூடலுார்: மலையடிவாரத்தில் இருந்த குளங்களை சீரமைக்க பல முறை உயரதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளேன். பல குளங்கள் இருந்த இடமே தெரியவில்லை. இருக்கும் குளத்தையாவது சீரமைப்பதில் மெத்தனம் காட்டுவதால் அதுவும் முழுமையாக அழியும் நிலையை அடைந்துள்ளது. அனைத்திலும் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.

கருத்து வேறுபாடு

கொடியரசன், கூடலுார்:கம்பம் ஒன்றிய அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இருந்த கருத்து வேறுபாட்டால் கடமான்குளம், சீகனேறி குளம் சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்து தண்ணீர் தேக்கினால் அப்பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும். இதற்கு நடவடிக்கை வேண்டும்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X