கொடையில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூலை 26, 2020
Share
 'கொடை'யில்  தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்:கொடைக்கானலில் ஊரடங்கு நாள் முதல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு நகரே வெறிச்சோடி கிடக்கிறது. வறண்ட வானிலை உள்ளுர்வாசிகளை வாட்டியது.

கடந்த வாரம் முதல் நகரை தழுவிச் செல்லும் மேகக்கூட்டம் எதிரே வருவோரை மறைத்து விடுவதால், வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றன. மழையால் குளிர்ந்த மலை நகரம் குளிர்ச்சியால் வெட, வெடக்கும் அளவுக்கு குளிர் நிலவுகிறது. ரோஜா பூங்கா மற்றும் பிரையன்ட் பூங்கா மலர்களை இயற்கை நாள்தோறும் அரவணைத்து செல்லும் காட்சியை காண முடிகிறது. நேற்று மாலையும் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X