பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சிலவரிகளில்....தேனி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

அபராதம் விதிப்பு

ஆண்டிபட்டி: இங்கு கிராமப்பகுதியில் துணை பி.டி.ஓ.,மல்லிகா, ஊராட்சி செயலாளர் மார்க்கண்டன் மற்றும் ராஜதானி போலீசார் முக கவசம் அணியாதவர்கள் குறித்து கண்காணித்தனர். ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோட்டில் கோத்தலுாத்தில் சோதனையில் ஈடுபட்டபோது முக கவசம் அணியாமல் ஆட்டோ, டூவீலர்களில் சென்ற 14 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர்.

கபசுர குடிநீர் வழங்கல்

கூடலுார்: நகராட்சி, எஸ்.டி.பி.ஐ., கட்சி இணைந்து கொரோனா தடுப்புக்கான கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. நகராட்சியில் முக்கிய இடங்களில் மக்களுக்கு சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழங்கி துவக்கி வைத்தார். கட்சி நகரசெயலாளர் காதர்மீரான், பொருளாளர் சபர்மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷாகின், சாதிக் அலி உடன் இருந்தனர்.

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா

பெரியகுளம்: பெரியகுளம் கண்மாய் நீரினால் நெல், வாழை, கரும்பு உட்பட நுாற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. சுற்றியுள்ள கிணறுகளுக்கு ஊற்று கிடைக்கும். இக்கண்மாய் சிறிதளவு நீரில் ஆகாயத்தாமரை நிறைந்து காணப்படுகிறது. இதனை அகற்றி துார்வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

கோடவுன் மூடல்

தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா நுகர்பொருள் வாணிப கழக கோடவுன் நல்லகருப்பன்பட்டியில் உள்ளது. இங்கு ரேஷன் பொருட்களை ஏற்றி, இறக்கும் பணிக்காக அல்லிநகரத்தைச் சேர்ந்த 25 பேர் வந்ததில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது. சில்வார்பட்டி ஊராட்சி சார்பில் தலைவர் பரமசிவம் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக கோடவுன் மூடப்பட்டது.

பயனற்ற குடிநீர் தொட்டி

போடி -: அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சன்னாசிபுரம் மலைக்கிராமம்.100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு குடிநீர் தரைத்தொட்டி கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் குழாய் இணைப்பு தராததால் காட்சிப்பொருளாக உள்ளது. மக்கள் அவதிப்படுகின்றனர். பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X