அவதுாறு கருத்துக்கு போலீசார் எச்சரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவதுாறு கருத்துக்கு போலீசார் எச்சரிக்கை

Added : ஜூலை 26, 2020
Share
திண்டுக்கல்:'சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் எச்சரித்துள்ளனர்.சமூக வலை தளத்தில் ஒரு தகவல் பதிவிடப்பட்டால் உறுதியான தகவல்தானா என்பதை அறியாமல் பலர் பகிர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, கொரோனா குறித்தும் ஊரடங்கு குறித்தம் தவறான தகவல்களை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில்

திண்டுக்கல்:'சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் எச்சரித்துள்ளனர்.

சமூக வலை தளத்தில் ஒரு தகவல் பதிவிடப்பட்டால் உறுதியான தகவல்தானா என்பதை அறியாமல் பலர் பகிர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, கொரோனா குறித்தும் ஊரடங்கு குறித்தம் தவறான தகவல்களை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பொய்யான மற்றும் அவதூறு கருத்துக்களை சமூக வலை தளங்களில் பரப்புவோரை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.ரவளிபிரியா உத்தரவின் பேரில் சமூக வலைத்தளங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், அவதூறு மற்றும் பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X