தமிழ்நாடு

100 கர்ப்பிணிகள் 'டிஸ்சார்ஜ்'

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement


இங்கு ஒருங்கிணைந்த பேறுகால வசதியுடன் கூடிய 'கோவிட் கேர் நல வார்டு' துவங்கப்பட்டது. இதில் மார்ச் 24 முதல் நேற்று வரை 100 கர்ப்பிணிகள் கொரோனா பாதித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் 27 பேர் சுகப்பிரசவம், 36 பேர் 'சிசேரியன்' மூலமும் குழந்தைகளை பெற்றனர். பிரசவித்த தாய்மார்கள் 63 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று குணமடைந்த மேலும் ஏழு பேர் பிரசவ காலம் நெருங்காத காரணத்தால் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

தற்போது 30 பேர் கர்ப்பிணிகளாகவும், பிரசவித்த தாய்மார்களாகவும் சிகிச்சையில் உள்ளனர்.தாய்ப்பால் வங்கியின் சேவைகொரோனா சிகிச்சையில் தாய்ப்பால் வங்கியின் சேவை மகத்தானதாக மாறியுள்ளது. கொரோனா பாதித்த பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளை தொட்டால் தொற்று பரவிவிடும் என்பதால் கண்ணாடி வழியாகவே குழந்தைகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரசவித்த உடன் தாய், சேய் பிரிக்கப்பட்டு குழந்தைகள் தனியறைக்கு மாற்றப்படுகின்றனர். இங்கு தாய்ப்பால் வங்கி மூலம் மிகுந்த எச்சரிக்கையுடன் பால் வழங்கப்படுகிறது. தாய்மார்களின் கோரிக்கைபடி முழுக்கவச உடை, மகப்பேறு டாக்டர், நர்ஸ்கள் கண்காணிப்பில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

சவால்

முதல்வர் இளங்கோவன் கூறுகையில், பிறந்த குழந்தைகளுக்கு பிரசவித்த தாய்மார்கள் தொடுதல் மூலம் கொரோனா தொற்று ஏற்படாமல் காப்பாற்றுவது எங்களுக்கு மிகுந்த சவாலாக உள்ளது. பாசத்திற்கும், கிருமிக்கும் நடக்கும் போராட்டத்தில் தாய், சேய்களை முழுமையாக காப்பாற்றி இதுவரை 63 பேரை டிஸ்சார்ஜ் செய்துள்ளோம். மகப்பேறு மருத்துவத்துறை டாக்டர்கள், நர்ஸ்கள் செய்யும் சேவை மகத்தானது. அவர்களுக்கு பாராட்டுக்கள்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X