தமிழ்நாடு

நில வரை பட கட்டணம் அதிகரிப்பு; விவசாயிகள்பாதிப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:மாவட்டத்தில் நிலவரைபட கட்டணம் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது இதனால் கிராமங்களில் நிலத்தை உட்பிரிவு செய்பவர்கள் பாதிக்கப்படுவர்.



நில அளவை இணை இயக்குனர் தலைமையில் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையில் நில வரைபடம் ரூ.20லிருந்து ரூ.50 ஆகவும், டோபோ வரைபடம் ரூ.100, ஒரு சர்வே எண்ணின் எல்லைகளை காட்டும் வரைபடம் ரூ.20 லிருந்து ரூ.100 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேல்முறையீட்டு சர்வே (பழைய கட்டணம் ரூ.50) ரூ.400, உட்பிரிவு வரைபடம் புன்செய் (பழைய கட்டணம் ரூ.30) ரூ.1000, நன்செய் (ரூ.50) ரூ.2000, மேல்முறையீட்டு மறுஅளவை நன்செய், புன்செய்களுக்கு (ரூ.60) முறையே ரூ.4000, ரூ.2000 ஆக உயர்த்தி உள்ளது. மாவட்ட வரைபடம் தாள் ஒன்றிற்கு ரூ.500, மாவட்ட எல்லைக்கோடு ரூ.300, தாலுகா ரூ.1000, தாலுகா எல்லை வரைபடம் ரூ.500, கிராம வரைபடம் ரூ.200 ஆக உயர்த்தி உள்ளது.

கட்டண உயர்வால் அதிருப்திமும்மடங்கு கட்டண உயர்வால் கிராமங்களில் நிலத்தை உட்பிரிவு செய்பவர்கள் பாதிக்கப்படுவர்.

இதுகுறித்து வத்தலக்குண்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறுகையில், ''கட்டணத்தை 18 ஆண்டுகளுக்குப் பின் அதிகரிப்பது நியாயமானதே. ஆனால் 3 மடங்கு அதிகரிப்பு மக்களைப் பாதிக்கும். கொரோனா தொற்று பரவலால் பலவகையிலும் விவசாயிகள் பாதிப்படைந்து உள்ளனர். தற்போது இந்த கட்டண உயர்வால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல் உள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X