மாவட்டத்தில் 171 பேருக்கு கொரோனா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் 171 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 26, 2020
Share

தேனி:மாவட்டத்தில் டாக்டர்கள், சிறை அதிகாரிகள், எஸ்.ஐ., உட்பட 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி ஒன்றியத்தில் அரண்மனைப்புதுார் 50 வயது பெண், வசந்தநகர் 23 பெண் உட்பட 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பெரியகுளம் கிளை சிறையின் 34 வயது கண்காணிப்பாளர், 36 வயது பயிற்சி பெண் கண்காணிப்பாளர், சில்வார்பட்டி 36 வயது பெண், முதலக்கம்பட்டி 33 வயது பெண், அழகர்நாயக்கன்பட்டி 55 வயது ஆண், தேவதானப்பட்டி வடக்குத்தெரு 23 வயது இளம்பெண் உட்பட ஒன்றியப் பகுதிகளில் 54 பேர் பாதிக்கப்பட்டனர்.

போடி ராசிங்காபுரம் 46 வயது தனியார் மருத்துவமனை பல் டாக்டர் உட்பட 21 பேர், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பயிற்சி டாக்டர், திண்டுக்கல், மதுரையை சேர்ந்த தலா ஒருவர், கூடலுாரை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டனர்.சின்னமனுார் கந்தையா பிள்ளைத்தெரு உத்தமபாளையம் ஸ்டேஷன் 54 வயது எஸ்.ஐ., விருதுநகர் மம்சாபுரத்தை சேர்ந்த தேவாரம் பேரூராட்சி 54 வயது ஓவர்சியர் உட்பட 9 பேர், கண்டமனுரை சேர்ந்த 8 பேர், உத்தமபாளையம் பண்ணைப்புரம் 25 வயது இளம்பெண் உட்பட 27 பேர், ஆண்டிபட்டி உப்புத்துறை பால்வாடியின் சோலைத்தேவன்பட்டி 26 வயது ஆசிரியை, கொண்டமநாயக்கன்பட்டி தனியார் வங்கி 31 வயது உதவி மேலாளர், சக்கம்பட்டி 24 வயது கர்ப்பிணி, 47 வயது கம்பம் காமயக்கவுண்டன்பட்டி பேரூராட்சியின் ஓவர்சியர் உட்பட மாவட்டத்தில் 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.792 பேரிடம் பரிசோதனைதேனி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்காக 792 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், கோவிட் கேர் நல மையங்களில் இருந்து 246 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X