இறுதிசடங்குக்கு பின் வந்தகொரோனா தகவலால் பீதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறுதிசடங்குக்கு பின் வந்த'கொரோனா' தகவலால் பீதி

Added : ஜூலை 26, 2020
Share

வடமதுரை:வடமதுரையில் மூதாட்டிக்கு இறுதி சடங்குகளை செய்த பின் 'கொரோனா உறுதி' தகவல் வந்ததால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வடமதுரை மடத்துக்கடை பகுதி 67 வயது மூதாட்டி ஒருவர், உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் ஜூலை 21ல் இறந்தார். உறவினர்கள் அவரது உடலை வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.மறுநாள் திண்டுக்கல் மின்மயானத்தில் எரியூட்டினர். மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வந்தது.

சுகாதாரத்துறையினர் அப்பகுதியினரை தொற்று பரிசோதனை செய்ய அறுவுறுத்தினர். இதனால் துக்க நிகழ்வில் பங்கேற்றோரிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.அப்பகுதியினர் கூறுகையில், 'மருத்துவமனை நிர்வாகம் பரிசோதனை முடிவில் தொற்று இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கை செய்து அனுப்பிருக்க வேண்டும். சுகாதார,பேரூராட்சி துறையினர் மூலம் இறந்தவர் வீட்டுக்கு உரிய வழிகாட்டுதல் தெரிவித்து இருந்தால் தொற்று பரவல் வாய்ப்பை தடுத்திருக்கலாம்' என குமுறுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X