பொது செய்தி

தமிழ்நாடு

'நோ பார்க்கிங்'கில் வாகனம் நிறுத்தினால் பறிமுதல்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

தேனி:தேனியில் 'நோ பார்க்கிங்'கில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,' என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் ஆம்புலன்ஸ் வந்து செல்லும் வகையில் பிரதான ரோடுகளில் வாகனங்கள் நெரிசலை கட்டுப்படுத்த சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., உத்தரவிட்டார். அதனடிப்படையில் தேனி -- மதுரை ரோட்டில் இடது, வலது புறம் நிறுத்தப்படும் டூவீலர்கள் இனி பழைய பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.

பங்களாமேட்டில் டூரிஸ்ட் வேன்கள் மாற்றப்பட்டு திட்டச்சாலையில் நெரிசலின்றி நிறுத்த வேண்டும். பங்களாமேட்டில் கார்கள் நிறுத்தப்பட வேண்டும். மதுரை ரோட்டில் பார்க்கிங் வசதிகளை போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். விதிமுறைகளை மீறும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X