பி.எஸ்.என்.எல்., பழுது நீக்கத்தில் அலட்சியம் சரண்டர் செய்ய வற்புறுத்தும் ஊழியர்கள்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கன்னிவாடி:டெலிபோன் பழுதுநீக்கலில் அலட்சியமும், சரண்டருக்கு வற்புறுத்தும் ஊழியர்களின் வழிகாட்டலும், பி.எஸ்.என்.எல்., மீது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

வங்கிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் பலவும் தகவல் தொடர்பு, இணையதள சேவைக்கு பி.எஸ்.என்.எல்., தரைவழி இணைப்புகளை மட்டுமே நம்பியுள்ளனர். கன்னிவாடி, எச்.ஆர்.கோட்டை, ஆத்துாரில் உள்ள தரைவழி இணைப்பக நிர்வாகத்தை சின்னாளபட்டி பிரிவு அலுவலகத்திற்கு மாற்றியுள்ளனர்.

பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து, இப்பகுதியினர் கூறியதாவது: அடிக்கடி பழுது ஏற்பட்டு, தேசிய, கூட்டுறவு வங்கிகள், அரசு அலுவலகங்களின் சேவை தடைபடுகிறது. வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். செயல்பாட்டில் உள்ள இணைப்புகளின் ஒயர்களை ஊழியர்கள் எடுத்துச்செல்கின்றனர். சில ஊழியர்கள் இணைப்பை சரண்டர் செய்யுங்கள் எனவும் கூறுகின்றனர். பழுது நீக்க புகார்கள் மீது நடவடிக்கை இல்லை. அதிகாரிகளை மொபைலில் தொடர்பு கொண்டாலும் பதிலளிப்பதில்லை'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X