சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீ்ஸ் செய்திகள் : திண்டுக்கல்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

தொழிலாளி பலி
வேடசந்துார்: புளியமரத்துக்கோட்டை பழனிச்சாமி மகன் ஐயப்பன் 23. பெயின்டர். இருசக்கர வாகனத்தில் சீத்தமரம் நால்ரோட்டில் இருந்து, சாலையூர் நால்ரோட்டிற்கு சென்றார். பின்னால் வந்த மில் வேன் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இறந்தவர் அடையாளம் தெரிந்தது

வேடசந்துார்: குடகனாற்று பகுதியில் ஒருவர் தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் துாக்கில் பிணமாக தொங்கினார். விசாரணையில் வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை கமல்தாசன் 38. ஒரு மில்லில் பணியாற்ற வந்தவர், இரவு நேரம் போதையில் ரோட்டில் செல்லும் லாரியை மறிப்பதும் தலையில் அடிபடுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் தெரிந்ததாகவும், பிறகு அவரே குடகனாற்று பகுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சாலை மறியல்

பழநி: சின்னகலையமுத்தூரைச் சேர்ந்த சிறுவன் மோகன் 12, நேற்று முன்தினம் முதல் காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.இந்நிலையில், ஒரு வீட்டருகே மோகன் இறந்துகிடந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் பழநி அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X