பொது செய்தி

இந்தியா

எனக்கெதிராக பாலிவுட்டில் சதி: ஏ.ஆர். ரஹ்மான் கவலை

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (74)
Share
Advertisement
மும்பை: பிரபல இமையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனக்கு பாலிவுட்டில் அதிக வாய்ப்பு கிடைக்காதது குறித்து தனியார் ரேடியோவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் வதந்தி பரப்பி வருகிறது. எனக்கு நல்ல படங்களும், அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு இந்த கும்பலே காரணம் என்பதை சமீபத்தில் புரிந்து கொண்டேன். தில் பேச்சாரா ஹிந்தி
AR Rahman, rumours, Bollywood, music composer, bollywood


மும்பை: பிரபல இமையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனக்கு பாலிவுட்டில் அதிக வாய்ப்பு கிடைக்காதது குறித்து தனியார் ரேடியோவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் வதந்தி பரப்பி வருகிறது. எனக்கு நல்ல படங்களும், அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு இந்த கும்பலே காரணம் என்பதை சமீபத்தில் புரிந்து கொண்டேன். தில் பேச்சாரா ஹிந்தி திரைப்படத்தின் இயக்குனர் முகேஷ் சாப்பாரா என்னிடம் வந்த போது இரண்டு நாட்களில் நான்கு பாடல்கள் பதிவு செய்து கொடுத்தேன்.


latest tamil news


அதற்கு அவர் உங்களிடம் போக வேண்டாம் என பாலிவுட்டில் பலர் கூறுகின்றனர். உங்களை பற்றி பல விஷயங்களை கூறுகின்றனர் என்றார். அப்போது தான் பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன். இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.
பாலிவுட் இளம் நடிகர் சுசாந்த் சிங் தற்கொலைக்கு ஹிந்தி திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் வாரிசு நடிகர்கள் தான் காரணம் என ஏற்கனவே புகார் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ள தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
30-ஜூலை-202017:34:25 IST Report Abuse
Tamilnesan விஜயகாந்த் படத்தில் ஒரு கட்சியில் வில்லன் ஒருவர் வசனம் பேசுவார். "உங்கள் நாட்டு பங்கு சந்தை எவ்வளவு புள்ளிகள் இருக்க வேண்டும், கிரிக்கெட்டில் உங்கள் ஆட்டக்காரர்கள் எவ்வளவு ரன் எடுக்க வேண்டும்," ...இப்படி பல துறைகளை பற்றி பேசுவார், அந்த படத்தின் வெளி நாட்டு வில்லன். இது படத்திற்காக சித்தரிக்கப்பட்ட கற்பனை காட்சி தான். ஆனால், அது தற்போது உண்மையாக நடக்கிறது. சினிமா, கிரிக்கெட், பங்கு சந்தை, ஊடகம், அரசியல் அனைத்திலும் அந்நிய நாட்டு சக்திகளின் ஆதிக்கம் இருக்கிறது என்கிற கசப்பான உண்மை தான் அது.
Rate this:
Cancel
Arv Sekar - Riyadh,சவுதி அரேபியா
30-ஜூலை-202016:40:31 IST Report Abuse
Arv Sekar மதம்மாறிய இவனுக்கே இந்துக்களை பிடிக்காது
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
28-ஜூலை-202003:47:03 IST Report Abuse
Ram Illayaraja used to always say Music composer and Music Director are different... He beleives everyone are Music Directors and not music composers like MSV,, Illayaraja... He always insist this... Not sure A R R is a Music Director or Music Composer
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X