பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பு.முட்லுார் அட்சயாமந்திர் பள்ளி தொடர் சாதனை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

மாணவர்களை, அருகில் இருந்து கவனிப்பதால், அவர்களின் பெற்றோர்களுக்கு, முழு திருப்தி ஏற்படுகிறது என பு.முட்லுார் அட்சயா மந்திர் மேல்நிலைப் பள்ளி தாளாளர் புருேஷாத்தமன் கூறினார்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் அட்சயாமந்திர் மேல் நிலைப் பள்ளி கடந்த 1992ம் ஆண்டு பள்ளி தாளாளர் புருஷோத்தமன், அவரது மனைவி சிவகாமி புருஷோத்தமன் ஆகியோரால் துவங்கப்பட்டது. தற்போது, 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இது குறித்து பள்ளி தாளாளர் புருஷோத்தமன் கூறியதாவது:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். மாணவர்களுக்கு, சிறந்த ஆசிரியர்களால், பாடங்கள் மட்டுமின்றி தனித்திறன் போட்டிகளுக்கு பயிற்சிகள், சதுரங்கம், கைப்பந்து, நீளம் தாண்டுதல், இறகு பந்து, தற்காப்பு கலைகள், பரதநாட்டியம், நடனம், இசை பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.பள்ளி வளாகத்தில், நவீன விளையாட்டு மைதானம், நவீன ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ், கராத்தே, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தனி வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான விடுதி வசதியுடன் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. பொதுத் தேர்வின் போது, மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் அருகில் இருந்து கவனிப்பதால், மாணவர்களின் பெற்றோர்களுக்கு, முழு திருப்தி ஏற்படுகிறது.இவ்வாறு, பள்ளி தாளாளர் புருஷோத்தமன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X