பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை மருத்துவ பட்டய பயிற்சி வகுப்பு கடலுார் தி சுசான்லி குரூப்ஸ் நடத்துகிறது

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கடலுார் தி சுசான்லி குரூப்ஸ் நடத்தும் இயற்கை மருத்துவ பட்டய பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என, தி சுசான்லி குரூப்சின் சேர்மன் டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியது:சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் விஜயராகவன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்படி, தமிழ் (இயற்கை) மருத்துவ ஆய்வுஇருக்கையின் மூலமாக தமிழ் மரபு உணவு ஆலோசகர், தமிழ் மூலிகையியல், தமிழ் மரபு வேளாண்மை நுட்பவியல் ஆகிய மூன்று பட்டய பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் நேரடியாக பயிற்சி நடத்தப்படுகிறது. பணியில் உள்ளோர், வேறு தொழில் புரிவோர் இக்கல்வியில் சேர முடியும்.இவ்வாய் இருக்கையின் பொறுப்பாளர் பேராசிரியை உஷாராவி, 28 ஆண்டுகளாக இயற்கை வழி சிகிச்சை முறையில் சிறந்தவர். இதில், பாரம்பரிய உணவு முறைகளால் நோய் தீர்க்கும் அற்புத கலையை முழுமையாக கற்று, தமிழ் மரபு உணவு ஆலோசகர் என்ற பட்டயத்துடன் ஆலோசனை வழங்கும் வாய்ப்பு கிடைக்கும்.இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரான நான், சிறு குறு தானியங்கள் மூலம் மூலிகைகள் குறித்து 28 ஆண்டுகளாக ஆய்வு செய்து, சொந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, மூலிகை சார்ந்த உணவு பொருட்களையும் உருவாக்கி உள்ளேன்.அனுபவமும், திறமையும் ஒருங்கிணைந்தவர்கள் மூலமாக நடத்தப்படும் பயிற்சியில், பிளஸ் 2 கல்வித் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் சேரலாம். வயது தடையில்லை. மேலும் தகவல் பெற 9367622256 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X