அனந்தபுரம் போலீசாருக்கு ஹோமியோபதி மாத்திரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனந்தபுரம் போலீசாருக்கு ஹோமியோபதி மாத்திரை

Added : ஜூலை 26, 2020
Share

செஞ்சி; அனந்தபுரம் போலீசார் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மாத்திரை வழங்கப்பட்டது.அனந்தபுரம் பேரூராட்சியில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ அமைப்பு பரிந்துரை செய்துள்ள ஹோமியோபதி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் மாத்திரைகளை போலீசார் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கினர்.போலீசாருக்கான மாத்திரைகளை பேரூராட்சி செயல் அலுவலர் ரங்கன், சப் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதியிடம் வழங்கினார். வியாபாரிகளுக்கான மாத்திரைகளை மருத்துவ அலுவலர் டாக்டர் பாலாஜி, முன்னாள் தலைவர் சம்பத்திடம் வழங்கினார்.இதில் முரா அறக்கட்டளை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மதிவாணன் மற்றும் சுகாதாரத்துறையினர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X