பொது செய்தி

தமிழ்நாடு

வேர்க்கடலை விதைப்பண்ணை துணை இயக்குநர் ஆய்வு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

மரக்காணம்; மரக்காணம் அடுத்த தென்நெற்குணம் கிராமத்தில் உள்ள வேர்க்கடலை விதைப்பண்ணையை வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஆய்வு மேற்க்கொண்டார்.தென்நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ், தனது நிலத்தில் செட்டு நீர்பாசனம் மூலம் வேர்க்கடலை வி.ஆர்.ஐ-8 ரக விதைப்பண்ணை பயிர் செய்துள்ளார்.இந்த விதைப்பண்ணையை வேளாண்மைத் துறை துணை இயக்குநர் செல்வபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் விவசாயிகளிடம் அவர் கூறுகையில், 'வேர்க்கடலையில் கூடுதல் மகசூல் பெற 2ம் முறையாக கலையெடுக்கும் நேரத்தில் ஜிப்சம் ஏக்கருக்கு 400 கிலோ வீதம் இட்டு மண் அணைக்க வேண்டும்.இதனால் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறலாம். நீர் மேலாண்மைக்காக அனைத்துவிவசாயிகளும் சொட்டு நீர்ப்பாசன முறையை பயன்படுத்த வேண்டும் என்றார்.வேளாண்மை உதவி இயக்குநர் கருணாநிதி, துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன், உதவி விதை அலுவலர்கள் மோகன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X