பொது செய்தி

தமிழ்நாடு

தொரவி கோவிலில் ஆடிப்பூர விழா

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது.விழாவையொட்டி நேற்று முன்தினம், விநாயகர், முருகர், சிவகாமி உடனுறை நடராஜ பெருமானுக்கு சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் வளையல், குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாலி சரடு வைத்து சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை வழிபாடு நடந்தது. பூஜைகளை சிவனடியார் சரவணன் செய்திருந்தார். கொரானா தொற்று ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X