பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுாரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம் திறப்பு விழா

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் சந்தப்பேட்டையில் 9.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.சென்னை ஐகோர்ட் வளாகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம், ஐகோர்ட் தலைமை நீதிபதி அம்ப்ரேஷ்வர் பிரதாப் சாகி மற்றும்நீதிபதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தனர்.இதனைத் தொடர்ந்து புதிய கட்டட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மாவட்ட நீதிபதி ஆனந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி செங்கமலச்செல்வன், குத்துவிளக்கேற்றி நீதிமன்ற செயல்பாட்டை துவக்கி வைத்தனர்.முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சண்முகம், மாவட்ட கூடுதல் நீதிபதிகள் வித்யா, பிரகந்தா, நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜநந்திவர் மசிவா முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆனந்தன், செயலர் சரவணகுமார் வரவேற்றனர். தலைமை எழுத்தர்கள் சிவகுமார், வெங்கடேசன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.அரசு வழக்கறிஞர் சங்கர், வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ராஜ்குமார், பொருளாளர் சுப்ரமணியன், இணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர்கள் ரங்கநாதன், ராமதாஸ், தங்கம், ஆதி சங்கர், செல்வராஜ், ரஜினிகாந்த், அன்பு, தமிழ்ச்செல்வன், லட்சுமிகுமார், செந்தில்குமார், டேவிட் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வகுமார், பொறியாளர் கணேசன், ஒப்பந்ததாரர் பாரதி, வழக்கறிஞர் உதவியாளர் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், கார்த்தி பங்கேற்றனர்.பொறுப்பு எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி., பொறுப்பு சங்கர் தலைமையில், டி.எஸ்.பி., மகேஷ் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X