குப்பைகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் ஊர் மக்கள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பைகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் ஊர் மக்கள் மனு

Added : ஜூலை 26, 2020
Share

திண்டிவனம்; குயிலாப்பாளையம் கிராமத்தில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குப்பைகளை அகற்றக் கோரியும் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பொம்மையார்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த கிராம நலச் சங்கத் தலைவர் மணி மற்றும் ஊர் மக்கள் சார்பில் அனுப்பியுள்ள மனு:பொம்மையார்பாளையம் ஊராட்சி, குயிலாப்பாளையம் கிராமத்தில் இளைஞர் குழுவினரால் சேகரிக்கப்பட்ட குப்பைகள் ஊரின் நடுவே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, இந்த குப்பைகளை அகற்றக்கோரி, வானுார் வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி செயலர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X