பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கூட்டமைப்பு கட்டடத்திற்கு பூமி பூஜை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்; கண்டமங்கலத்தில் 72 லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பிற்கு புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.மாரியம்மன் கோவில் அருகே நடந்த விழாவிற்கு, வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் பிரபாகரன், நடராஜன், கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் கண்ணன், ஒன்றிய பொறியாளர் அறிவொளி முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலர் ஏழுமலை, இளைஞர் அணி செயலர் சவுரிராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தமிழ்மணி, வெங்கடாஜலபதி, மதியழகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் புருேஷாத்தமன், விஜயன், ஜெயராமன், கூட்டுறவு சங்கத் தலைவர் துரைக்கண்ணு, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர் சுப்ரமணி, துணைத் தலைவர் பழனி, இளைஞர் அணி பத்மநாபன், கிளை பேரவைச் செயலர் யூசூப் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X