தொழிலாளியை தாக்கியஅண்ணன், தம்பி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளியை தாக்கியஅண்ணன், தம்பி கைது

Added : ஜூலை 26, 2020
Share

விழுப்புரம்; தகராறில் கூலித் தொழிலாளியைத் தாக்கிய, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த திருவாமாத்துரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 48; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 20ம் தேதி சோழகனுார் ரேஷன் கடை அருகே நடந்து சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜயசந்திரன், 27; மற்றும் அவரது தம்பி இளங்கோ, 23; ஆகியோரை சாலையோரத்தில் நிற்குமாறு கூறியுள்ளார்.இதனால், ஏற்பட்ட தகராறில் விஜயசந்திரன், இளங்கோ ஆகியோர் வெங்கடேசனை திட்டி, தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விஜயசந்திரன், இளங்கோவை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X