புளிச்சபள்ளத்தில் ரூ.6.66 கோடியில் நீதிமன்ற கட்டடம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புளிச்சபள்ளத்தில் ரூ.6.66 கோடியில் நீதிமன்ற கட்டடம்

Added : ஜூலை 26, 2020
Share
திண்டிவனம்; வானுார் புளிச்சபள்ளத்தில் 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சிறிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. தற்போது, புளிச்சபள்ளம் ஊராட்சியில் ஆரோபுட் அருகே நிலம்

திண்டிவனம்; வானுார் புளிச்சபள்ளத்தில் 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சிறிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. தற்போது, புளிச்சபள்ளம் ஊராட்சியில் ஆரோபுட் அருகே நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம், 15 ஆயிரத்து 32 சதுர அடியில், 6 கோடியே 88 லட்சம் செலவில் புதிய உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்ட உள்ளது.இங்கு, நீதிபதி குடியிருப்பு, நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், உணவகம், லிப்ட், பொதுமக்கள் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை புளிச்சபள்ளத்தில் நேற்று காலை நடந்தது. விழாவிற்கு அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி பூமி பூஜையை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி வனஜா, தலைமை குற்றவியல் நீதிபதி முத்துக்குமரவேல், எஸ்.பி., ராதாகிருஷ்ணன், டி.ஆர்.ஓ., ஸ்ரேயா பி சிங், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கிற ரகுராமன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் பக்தவச்சலம், சதீஷ்குமார், ராமதாஸ், கண்ணன், கிளியனுார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் பிரபு, வானுார் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் அய்யனார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் குமார், அ.தி.மு.க., நிர்வாகிகள் அம்பேத்குமார், ராஜா, சுமன், கார்த்திகேயன், வீரப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X