இந்தியா

பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிகழ்வில் பங்கேற்ற என்.ஆர். காங்., எம்.எல்.ஏ., ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.என்.ஆர்.காங்., செயலரும், கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெயபாலுக்கு, கடந்த மூன்று நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது. உடன், அவர் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.ஜெயபால், கடந்த 20ம் தேதி நடைபெற்ற சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று, எதிர்க்கட்சி தலைவருடன் வெளிநடப்பு செய்தார். பின்னர், கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில் சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்ற இவர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் சந்தித்து பேசினார்.சட்டசபையில் அவரது இருக்கை முதல்வருக்கு நேர் எதிராகவும், சபாநாயகர் இருக்கைக்கு அருகிலும் அமைந்துள்ளது. இதனால், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமன்றி, முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், பிற கட்சி எம்.எல்.ஏ.,க்களும் கலக்கம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் எம்.எல்,ஏ,, ஜெயபால் என்பது குறிப்பிடத்தக்கது.ரங்கசாமி தனிமை: என்.ஆர்.காங்., செயலர் ஜெயபால் எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியின் நிறுவனரான எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில், அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.இதேபோல், சட்டசபையில் ஜெயபால் எம்.எல்.ஏ., இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.,க்களையும் தனிமைப்படுத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X