இந்தியா

புதுச்சேரியில் கொரோனாவிற்கு மூவர் பலி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 3 பேர் கொரோனாவில் இறந்ததால், பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்றுமுன்தினம் வரை 2,513 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 35 பேர் இறந்திருந்தனர். இந்நிலையில் நேற்று 775 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.அவர்களில் புதுச்சேரியில் 113 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 23 பேர் என மொத்தம் 139 பேருக்கு (17.9 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,654 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில், கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாழைக்குளத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த கணுவாப்பேட்டையை சேர்ந்த 75 வயது மூதாட்டி, ஏனாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயது முதியவர் என மொத்தம் மூவர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர்.இவர்கள் அனைவரும்இருதய நோயாளிகள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.தற்போது கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் 514 பேர், ஜிப்மரில் 288 பேர், கோவிட் கேர் சென்டரில் 150 பேர், காரைக்காலில் 42 பேர், ஏனாமில் 59 பேர், மாகியில் 2 பேர் என மாநிலத்தில் மொத்தம் 1,055 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் 32 பேர், ஜிப்மரில் 19 பேர், கோவிட் கேர் சென்டரில் 14 பேர், காரைக்காலில் 13 பேர் என மொத்தம் 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,561 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34,305 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.அதில், 31,142 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 353 பேருக்கு பரிசோதனை வரவேண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X