இந்தியா

பிராமண சமூகத்தினருக்காக 'வேதபாரதி மேட்ரிமோனி'

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பிராமண சமூகத்தினர் ஜாதக பரிவர்த்தனைக்கு, பதிவு செய்யலாம் என, 'வேதபாரதி மேட்ரி மோனி' அறிவித்துள்ளது.'வேதபாரதி' என்ற பாரத பண்பாட்டு அமைப்பு, புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, உபநயனம் ஆன பிராமண குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சந்தியாவந்தன பயிற்சி அளித்தல், வேதம் சொல்லி தருதல் போன்ற அறப்பணிகளை செய்து வருகிறது.மேலும், பெண்களின் வாழ்க்கைக்கு தேவையான சுய முன்னேற்ற வழிகாட்டல், பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர், அடுத்து என்ன படிக்கலாம் என்ற உயர் கல்வி வாய்ப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம், பிராமண சமூகத்தினரை ஒன்றிணைத்து வருகிறது.லாப நோக்கமின்றி அறப்பணிகள் செய்து வரும் இந்த அமைப்பு, நமது கலாசாரப்படி, உரிய காலத்தில் திருமணம் நடைபெற, பிரா மண சமுதாயத்தினருக்காக 'வேதபாரதி மேட்ரி மோனி' நடத்தி வருகிறது.புதுச்சேரி அலுவலகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்த ஜாதகப் பரிவர்த்தனை, கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, அவரவர் இல்லங்களில் இருந்தவாறே 'ஸூம்' (ZOOM) செயலி வாயிலாக பெற்றோர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.ஆகஸ்ட் 15, 16ம் தேதிகளில் நடைபெற உள்ள சந்திப்பு நிகழ்ச்சிக்காக, பிராமண வகுப்பை சார்ந்த வடமா, பிரஹசர்ணம், அஸ்டசஹஸ்ரம், தெலுங்கு, கன்னட பிராமணர், வைஷ்ணவ வகுப்பை சார்ந்த தென்கலை, வடகலை பிரிவினர், வைதீக பிராமணர், கோவில் அர்ச்சகர் என அனைத்து பிரிவை சார்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண், பிள்ளைகள் ஜாதகத்தை பதிவு செய்து வருகின்றனர்.இந்நிகழ்ச்சியின் பலனாக, விரைவாகவும் உரிய காலத்திலும் அவரவர் இல்லங்களில் விவாக வைபவம் நடைபெற வாய்ப்பு ஏற்படும். எனவே, இந்த வாய்ப்பை பிராமண சமூக பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இது தொடர்பான விபரங்களுக்கும், ஜாதகங்களை பதியவும் பாலு 9442094380, ரவிச்சந்திரன்- 9987035169, நடராஜன்- 9443103404 ஆகியோரை தொடர்பு கொள்ளவும். பதிவு செய்ய ஆகஸ்ட் 5 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X