இந்தியா

மனைவியுடன் தகராறு செய்த வருமான வரி அதிகாரி மீது வழக்கு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மனைவியிடம் தகராறு செய்த வருமான வரித்துறை ஆய்வாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.பீகார் மாநிலம் பாட்னாவைர் சேர்ந்தவர் இன்கேப் அல்லாம்,33; அங்குள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆர்னே கவுசர்,27; புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., மேற்படிப்பு படித்து வருவதால், பெரிய காலாலப்பட்டு பங்களா தெருவில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பெரியகாலாப்பட்டு வந்த இன்கேப் அல்லாம், மனைவியுடன் தங்கியிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் தம்பதி இடையே குடும்ப பிரச்னை காரணமாகதகராறு ஏற்பட்டது.இதுகுறித்து அவரது மனைவி ஆர்னே கவுசர் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார், இன்கேப் அல்லாம் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X