கடற்கரை சாலையில் கவர்னர் நடைபயிற்சி | Dinamalar

இந்தியா

கடற்கரை சாலையில் கவர்னர் நடைபயிற்சி

Added : ஜூலை 26, 2020
Share

புதுச்சேரி; கவர்னர் கிரண்பேடி, 6 மாதத்திற்கு பிறகு, நேற்று மாலை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக கவர்னர் கிரண்பேடி, ராஜ்நிவாசை விட்டு வெளியே வராமல் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்தார்.மேலும், சமூக வலைதளங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திவந்தார்.இதுதொடர்பாக, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் விமர்சித்ததை தொடர்ந்து, காரில் இருந்தபடி நகரப்பகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்டார்.இந்நிலையில், அவர் நேற்று மாலை கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, பாரதி பூங்கா அருகே துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.அவருடன், கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.இதனையடுத்து, கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் கொரோனா தொற்று பரவலால், 6 மாதத்திற்கு பிறகு தற்போது கடற்கரை சாலையில் நடைபயிற்சியில் ஈடுப்பட்டதாக பதிவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X