சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

நம் அம்மா, பாட்டிமார் சித்தர்களே!

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 நம் அம்மா, பாட்டிமார் சித்தர்களே!


நம் அம்மா, பாட்டிமார் சித்தர்களே!

உணவே மருந்தாக இருந்த அந்த காலம் பற்றி, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சவும்யா: நம் அம்மாக்களும், பாட்டிகளும் சித்தர்களே. நம் முன்னோர்களான சித்தர்கள், தங்களுக்காக வாழாமல், உலகத்திற்காக வாழ்ந்தனர். அவர்கள் சொல்லிச் சென்ற பழக்க, வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், இப்போதும் சித்தர்கள் நம்முடன் வாழ்வதாகவே நம்புகிறேன்.சித்தர்கள் போலவே, நம் பாட்டிமார்களும், அம்மாக்களும், நமக்காக சிறந்த உணவை கொடுத்து வந்துள்ளனர்.தன் குழந்தைகளுக்காகவே, அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். கொஞ்ச காலத்திற்கு முன், என் மாமியார், தோட்டத்தில் வளர்ந்திருந்த எல்லா, சாதாரண கீரைகளையும் பறித்து, ஒரு கறி செய்து கொடுத்தார் பாருங்கள். அவ்வளவு அமிர்தமாக இருந்தது.எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, எங்கள் அம்மா செய்வது மருந்து சமையல் தான். தினசரி உணவையே, மருந்து போல ஆரோக்கியமாக செய்து வந்தார். உணவில் தக்காளி அதிகம் சேர்க்க மாட்டார்; உப்பு அதிகம் இருக்காது; எண்ணெய் கூடுதலாக சேர்க்க மாட்டார்; பூண்டு நிறைய இருக்கும். இப்படி, மருந்து போல தான் உணவு இருந்தது.எனினும், அம்மாவுக்கு சின்ன வயதி லேயே சர்க்கரை நோய் வந்து விட்டது. ஆனால், அப்பாவுக்கு, 65 வயது வரை, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு வராமல், அம்மா பார்த்து கொண்டார். அதற்கேற்ப, விதவிதமான உணவு களை தயாரித்து கொடுப்பார்.இஞ்சி துவையல், பிரண்டை துவையல், பூண்டு குழம்பு, கீரை பொரியல், மிளகு காரக் குழம்பு, வாழைப்பூ வடை, நாட்டுக்கோழி ரசம், சுண்டைக்காய் குழம்பு, பாகற்காய் கூட்டு, காரப்பொடி மீன் குழம்பு, சுறா புட்டு என, மருந்தாகத் தான் உணவு இருந்தது.அதுபோல, கணக்கு பரீட்சை என்றால், நான்கு நாட்களுக்கு தொடர்ந்து வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டைக்காய் வதக்கல் என, தினமும் ஏதாவது ஒரு விதத்தில் வெண்டைக்காய் சேர்ந்து விடும். மழைக்காலம் என்றால் மாலையில், காபி, டீக்கு பதில், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்த காபி; கோடைக் காலம் என்றால், கேப்பை கூழ், மொச்சை போட்ட காரக்குழம்பு, மதியம் தாளித்த தயிர் சாதம் என, உணவே மருந்தாக இருக்கும்.இப்போதும் எங்கள் வீட்டு குழம்பு மிளகாய் பொடியில், தனியா, வெந்தயம், மிளகு, பெருங்காயம், சீரகம், சோம்பு, சுக்கு, மஞ்சள், கறிவேப்பிலையுடன் மிளகாய், கடலை பருப்பு, துவரம் பருப்பு போன்றவை இருக்கும். ஒரு மாத்திரை சாப்பிட்டால் கிடைக்கும் அத்தனை நலன்களும், நம் உணவில் இருக்குமாறு, நம் பாட்டிமார், அம்மாக்கள் பார்த்துக் கொண்டனர்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X