மூன்று ஆண்டுகளில் என்ன செய்தார் ஜனாதிபதி: பணி பட்டியல் வெளியீடு| President Ram Nath Kovind completes 3 years in office | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூன்று ஆண்டுகளில் என்ன செய்தார் ஜனாதிபதி: பணி பட்டியல் வெளியீடு

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி :இந்திய ஜனாதிபதியாக, ராம்நாத் கோவிந்த் பதவியேற்று, நேற்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தன. ராம்நாத் கோவிந்த் பதவியிலிருந்த இந்த மூன்று ஆண்டுகளில், அவர் மேற்கொண்ட பணிகள் தொடர்பான விபரங்களை, ஜனாதிபதி மாளிகை, 'டிஜிட்டல்' வரைபடங்களுடன் வெளியிட்டுள்ளது.நிவாரணம்அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஜனாதிபதி இதுவரை, ராணுவத்தினர், விஞ்ஞானிகள் உட்பட, 7,000 பேரை
மூன்று ஆண்டுகள் என்ன செய்தார் ஜனாதிபதி: பணி பட்டியல் வெளியீடு, President, Ram Nath Kovind, new delhi, president of india, kovind

புதுடில்லி :இந்திய ஜனாதிபதியாக, ராம்நாத் கோவிந்த் பதவியேற்று, நேற்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தன. ராம்நாத் கோவிந்த் பதவியிலிருந்த இந்த மூன்று ஆண்டுகளில், அவர் மேற்கொண்ட பணிகள் தொடர்பான விபரங்களை, ஜனாதிபதி மாளிகை, 'டிஜிட்டல்' வரைபடங்களுடன் வெளியிட்டுள்ளது.


நிவாரணம்அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஜனாதிபதி இதுவரை, ராணுவத்தினர், விஞ்ஞானிகள் உட்பட, 7,000 பேரை சந்தித்துள்ளார்.
கொரோனா நிவாரண உதவிக்கான 'பி.எம்-கேர்ஸ்' நிதியத்திற்கு, ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார்.அத்துடன், ஓராண்டு வரை, ஊதியத்தில், 30 சதவீதத்தை குறைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில், செலவுகள் குறைக்கப்பட்டு, சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராம்நாத் கோவிந்த், 2019 ஜூலை - நடப்பு ஜூலை வரை, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட, ஒன்பது நாடுகளின் அதிபர்களை வரவேற்று, விருந்தளித்துள்ளார்.


latest tamil newsஐந்து கண்டங்களைச் சேர்ந்த, உலகத் தலைவர்கள், 15 பேரையும், 28 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள், துணை துாதர்களையும் வரவேற்று உபசரித்து உள்ளார்.ஜனாதிபதி மாளிகை வரலாற்றில், முதன் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, விருதுகள் வழங்கப்பட்டன. கவர்னர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்களின், 50வது மாநாட்டை நடத்தினார்.

தினமும், ராணுவத்தினர் முதல் விஞ்ஞானிகள் வரை; விவசாயிகள் முதல் தீயணைப்பு வீரர்கள் வரை, சராசரியாக, 20 பேரை, ஜனாதிபதி சந்தித்தார். புதுச்சேரி பல்கலை, சிக்கிம் பல்கலை உள்ளிட்ட கல்வி மையங்களின், பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி ஒன்பது முறை பங்கேற்றுள்ளார்.ஜனாதிபதி, மத்திய அரசின், 48 சட்டங்கள், மாநில அரசுகளின், 22 சட்டங்கள், 13 அவசர சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.11 கவர்னர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தகவல் ஆணையர், லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையர் ஆகியோரை நியமித்துள்ளார்.

19 மாநிலங்களுக்கும், நான்கு யூனியன் பிரதேசங்களுக்கும் சென்றுள்ளார். பெனின், காம்பியா, கினியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு, முதன் முதலாக சென்ற ஜனாதிபதி என்ற சிறப்பை பெற்றுள்ளார். கடந்த, 2019 ஜூலை, 25 முதல் இதுவரை, ஜனாதிபதி மாளிகையை, ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 292 பேர் பார்வையிட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் தலைநகர், ஸ்ரீநகரில் உள்ள சினார் போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, முப்படை தினங்களில் பங்கேற்றுள்ளார்.


'மின்னணு அழைப்பிதழ்'பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்ளை, ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பாராட்டியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், 'மின்னணு அழைப்பிதழ்' அனுப்பும் முறையை அமல்படுத்தினார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X